ஜோ பைடன் ஆட்சியில் முக்கிய பொறுப்புகளில் இந்திய அமெரிக்கர்கள் நியமனம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஆட்சியில் மேலும் சில இந்திய அமெரிக்கர்கள் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 20ம் தேதி அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடனும், துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிசும் பதவியேற்றனர்.
இதற்கு முன்னதாகவே மருத்துவ துறை, வெள்ளை மாளிகை உட்பட பல முக்கியமான பொறுப்புகளில் 20 இந்திய அமெரிக்கர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மேலும் சில இந்திய அமெரிக்கர்களுக்கும் முக்கியமான பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
அதன்படி,
அமெரிக்க எரிசக்தி துறைத் தலைவராக தரக் ஷா,
அறிவியல் அலுவலக தலைவராக தன்யா தாஸ்,
பொது ஆலோசனை அலுவலக சட்ட ஆலோசகராக நாராயண் சுப்ரமணியன்,
புதைபடிவ எரிசக்தி அலுவலகத்தின் தலைவராக சுச்சி தலாட்டி
ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சர்வதேச மேம்பாட்டு நிதிக் கழகத்தின் செயல் தலைவராக தேவ் ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.