முதல் நாளே வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியாமல் நின்ற அமெரிக்க அதிபரும் மனைவியும்... கதவு திறக்காததன் பின்னணி இதுதான்!
அமெரிக்க அதிபராக பதவியேற்று வெள்ளை மாளிகைக்குள் காலடி எடுத்துவைக்க முயன்ற முதல் நாளே, ஜோ பைடனும் அவரது மனைவியும் அசௌகரியமான சூழல் ஒன்றை எதிர்கொள்ள நேரிட்டது.
தாங்கள் இனி வாழப்போகும் வீட்டுக்கு முன் நின்று புகைப்படக்கலைஞர்களுக்கு போஸ் கொடுத்த அதிபர் ஜோ பைடனும் அவரது மனைவியும் ஒருவரையொருவர் ஆரத்தழுவியபின் வீட்டுக்குள் நுழைய முயன்றனர்.
ஆனால், வீட்டின் கதவுகள் திறக்கவில்லை. ஆகவே, அசௌகரியமாக உணர்ந்த இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, அவரது குடும்பத்தினர் அனைவரும் என்ன நடக்கிறது என்று பார்க்க அருகில் சென்றுள்ளனர். கதவு திறக்காததன் பின்னணியில் ஒரு முக்கிய சம்பவம் உள்ளது.
வெள்ளை மாளிகையில், chief usher என்றொரு பதவி உள்ளது. chief usherஇன் வேலை, வெள்ளை மாளிகையில் உள்ள உணவு தயாரிப்போர், வேலைக்காரர்கள், கதவு முன் காவலுக்கு நிற்பவர்கள், மலர் அலங்காரம் செய்பவர்கள், பொறியாளர்கள் என அனைவரையும் மேற்பார்வை செய்து, உணவு முதல் நிர்வாகம் வரை அனைத்தையும் கவனித்துக்கொள்வதாகும்.
வெள்ளை மாளிகையின் chief usherஆக இருந்தவர் முன்னாள் அதிபரின் மனைவியான மெலானியா ட்ரம்பால் நியமிக்கப்பட்ட Timothy Harleth என்பவர்.
ஜோ பைடன், ஐந்து மணி நேரத்திற்கு முன்புதான் Timothyயை வேலையிலிருந்து நீக்கியிருந்தார்.
ஆக, வெள்ளை மாளிகையின் கதவு திறக்காததன் பின்னணியில் Timothy வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டதன் பங்கு இருக்கலாம் என கருதப்படுகிறது. இது வெள்ளை மாளிகையைப் பொருத்தவரை ஒரு பெரிய விதிமீறலாகும்.
வீட்டுக்குள் காலடி எடுத்துவைக்கும் முதல் நாளே, ஏராளமானோர் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இப்படி ஒரு விரும்பத்தகாத சம்பவம் நடந்ததால் ஜோ பைடன் அசௌகரியமாக உணர்ந்ததை வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காணலாம்.
பிறகு, கதவு திறப்பதையும் அதே வீடியோவில் காண முடிகிறது என்றாலும், யாராவது வீட்டுக்குள்ளிருந்து கதவைத் திறந்தார்களா, அல்லது ஜோ பைடனே கதவைத் தள்ளித் திறந்தாரா என்பது தெரியவில்லை!

