ரஷ்யா பெரிய விலை கொடுக்க நேரிடும்! புடினுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
உக்ரைனை ஆக்கிரமித்தால் ரஷ்யா பெரிய விலை கொடுக்க நேரிடும் என புடினுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ஜோ பைடன், உக்ரைனை ஆக்கிரமித்தால் ரஷ்யா பெரிய விலை கொடுக்க நேரிடும் மற்றும் பேரழிவுகரமான பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என அந்நாட்டு ஜனாதிபதி புடினிடம் கூறிதயாக தெரிவித்தார்.
அதேசமயம், ரஷ்ய ஆக்கிரமிப்பு மத்தியில் உக்ரைனுக்கு அமெரிக்க படைகளை அனுப்புவதற்கான எந்த திட்டமும் தற்போது இல்லை என பைடன் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனை ஆக்கிரமித்தால், ரஷ்யாவின் பொருளாதாரத்தின் மீதான பொருளாதார விளைவுகள் பேரழிவை சந்திக்கும் என நான் புடினிடம் தெளிவாக தெரிவித்துவிட்டேன்.
கடந்த வாரம் இரண்டு மணிநேரம் புட்டினுடன் தொலைபேசியில் பேசிய பைடன், உக்ரைனுக்குள் ஊடுருவினால் உலகில் ரஷ்யாவின் நிலைப்பாடு குறிப்பிடத்தக்க வகையில் மாறும் என்பதை ரஷ்ய தலைவருக்கு தெளிவுபடுத்தியதாகக் கூறினார்.