29 வயதில் திருமணம்.. 8 மாதத்தில் கணவர் தற்கொலை! பிக் பாஸ் பவானி ரெட்டியின் பகீர் பின்னணி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சின்னத்திரை நடிகை பவானியின் கடந்த கால வாழ்க்கை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆந்திராவை சேர்ந்தவர் பவானி ரெட்டி. இவர் தமிழ் சீரியல்களில் நடிக்க தொடங்கியதையடுத்து பல ரசிகர் பட்டாளங்கள் அதிகரிக்க தொடங்கின. குறிப்பாக தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சின்னத்தம்பி சீரியலில் அவர் கதாநாயகியாக நடித்ததால் மக்கள் மத்தியில் பயங்கர பிரபலமாகினார்.
இந்நிலையில் ஒரு சில காரணங்களால் நடிப்புக்கு இடைவெளி விட்ட இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார்.
இவருக்கு திருமணமாகி எட்டே மாதத்தில் இவரது கணவர் தற்கொலை செய்து கொண்டது யாவரும் அறிந்ததே. ஆனால் அவர் இது தொடர்பாக இது வரை எந்த தகவலும் வெளியிடவில்லை.
இந்நிலையில் முதல்முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி இசைவாணியிடம் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டது மனம் திறந்து பேசியுள்ளார். ஒவ்வொரு வாழ்க்கையில் ஒவ்வொரு சோகம் இருக்கத்தானே செய்கிறது என்று கூறினார்.

எனது கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற விஷயத்தை கேட்டதும் நான் அதிர்ச்சியில் உட்கார்ந்துவிட்டேன். அதன் பிறகு தான் என்ன நடந்தது என்று யோசித்து கவலைப்பட்டேன் என்று கூறியிருந்தார்.
கணவர் குறித்து முதல் முறையாக உருக்கமாக அவர் பேசியிருந்தது மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        