புலம்பெயர்தல் எதிர்ப்பு பிரேரணை: எக்கச்சக்கமாக செலவு செய்யும் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும்
சுவிட்சர்லாந்தில் வாக்கெடுப்புகள் நடப்பது புதிதல்ல என்றாலும், ஒரு குறிப்பிட்ட வாக்கெடுப்பு, இதுவரை இல்லாத அளவில் நாட்டின் கவனத்தை ஈர்த்துவருகிறது.
இதுவரை இல்லாத வகையில்...
அது, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to 10 Million Switzerland) என்னும் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்புதான்.

அதாவது, புலம்பெயர்தலை கடுமையாக எதிர்த்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி, நாட்டில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை ஒரு அளவுக்கு மேல் அதிகரித்துவிடக்கூடாது என்பதற்காக, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த பிரேரணையை முன்வைத்துள்ளது.
அடுத்த மாதம், அதாவது, ஜூன் மாதம் 14ஆம் திகதி அந்த பிரேரணை வாக்கெடுப்புக்கு வர உள்ள நிலையில், எப்படியாவது அதை நிறைவேற்றிவிடவேண்டும் என ஒரு தரப்பினர் துடிக்கிறார்கள்.
ஆனால், புலம்பெயர்ந்தோர் இல்லாவிட்டால், முக்கியப் பணிகளைச் செய்ய ஆட்கள் கிடைக்கமாட்டார்கள், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதை நன்கறிந்த ஒரு கூட்டமோ, அந்த பிரேரணை நிறைவேறாமல் தடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

ஆக, இரு தரப்பும், அதாவது, பிரேரணையை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும், தங்கள் கருத்துக்களை மக்கள் மனதில் பதியவைக்க பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.
விடயம் என்னவென்றால், இதற்கு முன் நடந்த எந்த பிரச்சாரங்களிலும் இல்லாத அளவுக்கு, இந்த பிரச்சாரங்களுக்கு பணம் செலவிடப்படுகிறது என்கிறது சுவிஸ் ஃபெடரல் தணிக்கை அலுவலகம்.
பிரேரணையை ஆதரிப்போர், 6.44 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை பிரச்சார பட்ஜெட்டுக்காக ஒதுக்கியுள்ள நிலையில், பிரேரணையை எதிர்ப்பவர்களோ, பிரச்சார பட்ஜெட்டுக்காக 9 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை ஒதுக்கியுள்ளார்கள்.
மக்கள் என்ன முடிவு செய்யப்போகிறார்கள் என்பதை ஜூன் மாதம் 14ஆம் திகதிக்குப் பிறகு பார்க்கலாம்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |