பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸின் தந்தை திடீர் மரணம்! லாஸ்லியா, அனிதா தந்தை சமீபத்தில் உயிரிழந்த சூழலில் அடுத்த சோகம்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸின் தந்தை காலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய இவர் மிஸ்டர் இந்தியா பட்டம் வென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில், இறுதிப்போட்டி வரை முன்னேறி இரண்டாம் இடம் பிடித்தார். இந்நிலையில், பாலாஜியின் தந்தை திடீரென மரணமடைந்துள்ளார். இதையறிந்த ரசிகர்கள் பாலாஜிக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக ஆறுதல் கூறி வருகின்றனர். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பாலாஜி, இதுவும் கடந்து போகும் என குறிப்பிட்டுள்ளார். பாலாஜியின் தந்தை மறைவிற்கு சக பிக்பாஸ் போட்டியாளர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் வெற்றியாளரான ஆரி டுவிட்டரில், பாலாஜி முருகதாஸ் தந்தையின் மறைவைக் கேட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். இந்த கடினமான தருணத்தில் குடும்பத்திற்கு பலமும் தைரியமும் இருக்கட்டும் என பதிவிட்டுள்ளார். பாலாஜி முருகதாஸின் அம்மா சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். ஏற்கனவே பிக்பாஸ் புகழ் அனிதா, லாஸ்லியாவின் தந்தைகளும் சமீபத்தில் மரணமடைந்த நிலையில் பாலாஜி தந்தை உயிரிழந்துள்ளது ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது.
This too shall pass
— Balaji Murugadoss (@OfficialBalaji) February 2, 2021
Deeply saddened to hear the demise of Balaji Murugadoss's Father.. May the family have the strength and courage in these tough moments.
— Aari Arjunan (@Aariarujunan) February 2, 2021