Bigg Boss தொகுப்பாளர்களில் அதிக ஊதியம் பெறுபவர் யார் தெரியுமா? வெளியான தகவல்
இந்திய அளவில் பிரபலமான நிகழ்ச்சியான Bigg Bossயில் அதிக ஊதியம் பெறும் தொகுப்பாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Bigg Boss
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் Bigg Boss நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொடங்கியுள்ளது. தமிழைப் பொறுத்தவரை கமல் ஹாசனுக்கு பதிலாக விஜய் சேதுபதி புதிதாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி Bigg Bossயில் 18வது சீசன் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் Bigg Boss நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பெறும் ஊதியம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதிக ஊதியம்
இதில் நடிகர் கமல் ஹாசன் தான் அதிக ஊதியம் பெற்று முதலிடத்தில் உள்ளார். அவருக்கு கடந்த சீசனில் ரூ.130 கோடி ஊதியமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அவருக்கு அடுத்தபடியாக தமிழ் Bigg Bossயை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி ரூ.60 கோடி ஊதியம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் நடிகர் சல்மான் கான் (இந்தி) ரூ.60 கோடியும், நடிகர் நாகர்ஜுனா (தெலுங்கு) ரூ.30 கோடியும், மோகன்லால் (மலையாளம்) ரூ.18 கோடியும் பெறுவதாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |