பிக்பாஸ் வீட்டில் கதறி அழும் முத்துக்குமரன் - நடந்தது என்ன?
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பிக் பாஸ் தமிழ் 8' நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போட்டியாளர் முத்துக்குமரன் கதறி அழுகும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
Bigg Boss Season 8
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் தற்போது தீபக், முத்துக்குமரன், விஜே விஷால், அருண் பிரசாத், ஜெஃப்ரி, ரஞ்சித், ராணவ், ரயான், செளந்தர்யா, ஜாக்குலின், அன்ஷிதா, பவித்ரா, மஞ்சரி ஆகிய 13 போட்டியாளர்கள் காணப்படுகின்றன.
இவ்வாரம் ரஞ்சித் வெளியேறுவார் எனவும் கூறப்படுகிறது. நேற்று நடத்த டாஸ்க்கில் நாமினேஷன் Nomination free pass-ஐ ரயான் பெற்றார்.
அதையடுத்து தற்போது முத்துக்குமரன் கதறி அழுகும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
கதறி அழும் முத்துக்குமரன்
இவ்வாரத்திற்கான சிறந்த போட்டியாளர்களை வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களும் இணைந்து தேர்ந்தெடுத்துள்ளனர்.
அதன்படி பவித்ரா, ஜெஃப்ரி மற்றும் முத்துக்குமரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அடுத்த வார்த்திற்கான தலைவர் போட்டியில் போட்டியிடலாம்.
இவ்வாரத்திற்கான தலைவர் போட்டியானது ஜாக்போட் அடிக்கும் விதத்தில் தான நடத்தப்பட்டுள்ளது. அதாவது, 13ஆம் வாரத்திற்கான Direct Entry Pass இற்காகவும் விளையாட வேண்டும்.
இந்நிலையில் முத்துக்குமரன் பவித்ராவிற்கு விட்டுக்கொடுத்து விளையாடியுள்ளார். இதனால் தலைவர் போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது, Nomination free pass போட்டியும் இனி நடக்காது என பிக்பாஸ் எச்சரித்துள்ளார்.
தன்னால் தான் வீட்டில் உள்ள அனைத்துப் போட்டியாளர்களும் இந்நிலை ஏற்பட்டுள்ளது என முத்துக்குமரன் கதறி அழுதுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |