இன்று பிக்பாஸிலிருந்து வெளியேறும் போட்டியாளர் யார்? லீக்காகிய உண்மை
பிக் பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறும் நபர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார்.
பின்பு பவா செல்லத்துரை வீட்டில் இருப்பது பிடிக்காமல் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினையும் இரண்டாகவே இருந்து வருகின்றது.
கடந்த வாரத்திற்கான தலைவராக யுகேந்திரன் இருந்து வருகின்றார். பிக் பாஸ் புதிய டாஸ்க் கொடுத்ததால் மீண்டும் போட்டியாளர்கள் மோதிக் கொண்டனர்.
இந்த வாரம் கேப்டன் யுகேந்திரன் தேர்வு செய்த மாயா, பூர்ணிமா, விஷ்ணு, சரவண விக்ரம், வினுஷா, பிரதீப் ஆகிய 6 பேர் சின்ன பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.
தற்போது மூன்று வாரம் முடிவடைய உள்ள நிலையில், இந்த வாரம் எலிமினேஷனுக்கு நிக்சன், அக்ஷயா உதயகுமார், மணிச்சந்திரா, விசித்ரா, ஐஷு, விஜய் வர்மா, மாயா கிருஷ்ணன், பூர்ணிமா ரவி, வினுஷா, சர்வணா விக்ரம் மற்றும் பிரதீப் ஆண்டனி உட்பட 11 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
வெளியேறுவது யார்?
பார்வையாளர்கள் தங்களுக்குப் பிடித்த போட்டியாளர்களுக்கு வாக்களிப்பதை உறுதிசெய்யும் அதே வேளையில், பிரதீப் மக்கள் ஆதரவு அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார்.
கடைசி மூன்று இடங்களில் விஜ்ய் வர்மா, வினுஷா, பூர்ணிமா காணப்படுகின்றனர். இதில் பூர்ணிமா மிகக் குறைந்த வாக்குகளே பெற்றுள்ளார்.
வைல்டு கார்டு போட்டியாளராக நடிகை அர்ச்சனா மற்றும் பாடகர் கானா பாலா இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பூர்ணிமா இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுகின்றது.
ஆனால் விஜய் வர்மா இந்த வாரம் போட்டியாளர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதால், கமல் இந்த வாரம் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே அதிகரித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |