ரஷ்யாவால் இதுவரை ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்கான விமானப் பயணிகளின் எண்ணிக்கை
ஏவுகணைத் தாக்குதல்கள் பயணிகள் விமானங்களுக்கு கடும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் இந்த காலகட்டத்தில், ரஷ்யாவின் பங்கு அதில் அதிகம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நெருப்பு கோளமாக
கிறிஸ்துமஸ் தினத்தன்று கஜகஸ்தான் நகரமான அக்டாவ் அருகே அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நெருப்பு கோளமாக வெடித்துச் சிதறியது. மொத்தமுள்ள 67 பயணிகளில் 38 பேர்கள் கொல்லப்பட்டனர்.
தற்போது விமான சேவை நிபுணர்கள் பலர் குறிப்பிடுகையில், கடந்த தசாப்தத்தில் பயணிகள் விமானங்கள் நடுவானில் சுடப்படுவது விமானப் பயணிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
2014 முதல் பயங்கரவாதம் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகளால் பயணிகள் விமானங்கள் ஆபத்தில் சிக்குவதை விட, ஏவுகணைகளால் வீழ்த்தப்படுவது அதிகரித்துள்ளதாகவே கூறுகின்றனர்.
வெளியான தரவுகளின் அடிப்படையில், ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட விமானப் பயணிகளின் எண்ணிக்கை 500 கடந்துள்ளதாகவே தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் வெடித்த அரசியல் மோதல்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட மூன்றாவது பெரிய பயணிகள் விமானம் இதுவென்றே கூறபப்டுகிறது.
தொடர்புடைய விமானமானது ரஷ்யாவின் செச்சினியா பகுதி மீது பறந்துகொண்டிருந்த போது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. தொடர்புடைய பகுதியில் உக்ரைனின் ட்ரோன் தாக்குதலை முறியடிக்கும் விதமாக ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டு வந்துள்ளது.
இது இரண்டாவது முறையாக
குறித்த விமானமானது அஜர்பைஜான் தலைநகரான Baku-வில் இருந்து செச்சினியாவின் Grozny பகுதிக்கு பயணப்பட்டுள்ளது. தற்போது இந்த கொடூர சம்பவமும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொடர்புடைய விமான விபத்துக்களால் கொல்லப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையை 330 என உயர்த்தியுள்ளது.
சம்பவம் நடந்த புதன்கிழமை அன்றே ரஷ்யாவும் கஜகஸ்தானும் இது பறவைகளால் ஏற்பட்ட அசம்பாவிதம் என்றே குறிப்பிட்டுள்ளனர். ஆனால், விமான பாகங்களில் சுடப்பட்டதன் அடையாளம் இருப்பதாக ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டால், இது இரண்டாவது முறையாக பயணிகள் விமானம் ஒன்றை ரஷ்யா வீழ்த்தியதாக கருதப்படும்.
2014ல் மலேசிய விமானம் ஒன்றை உக்ரைனில் வைத்து ரஷ்யா சுட்டு வீழ்த்தியது. அதில் 283 பயணிகளும் 15 ஊழியர்களும் மொத்தமாக கொல்லப்பட்டனர். 15 மாதம் நீண்ட விசாரணையின் முடிவில் ரஷ்யா தயாரிப்பான Buk ஏவுகணையால் தாக்குதல் நடந்தது உறுதி செய்யப்பட்டது.
2020ல் உக்ரைன் பயணிகள் விமானம் ஒன்று ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் 176 பேர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |