திருமண நினைவு நாளில் மனைவியை கண்டம் துண்டமாக வெட்டிய முதியவர்
இந்தியாவின் பீஹார் மாநிலத்தில், தங்கள் 57ஆவது திருமண நினைவு நாளில், தன் மனைவியை கண்டம் துண்டமாக வெட்டிக்கொன்றுள்ளார் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர்.
57ஆவது திருமண நினைவு நாளில்...
2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி, பீஹாரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான பீர்பால் ப்ரசாத் சாஹு (78), தங்கள் 57ஆவது திருமண நினைவு நாளில், தன் மனைவியாகிய சுமந்தி சின்ஹாவை (70) கொலை செய்து, அவரது உடலை 12 துண்டுகளாக வெட்டினார்.

தன் மனைவிக்கு தன் மாமாவுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தன் மனைவி மீது வன்மம் வைத்துள்ளார் பீர்பால்.
தங்கள் திருமண நாளில் தன் மனைவியை கொலை செய்ய முன்கூட்டியே திட்டமிட்ட பீர்பால், 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி தன் திட்டத்தை நிறைவேற்றினார்.
57ஆவது திருமண நினைவு நாளில், தன் மனைவியைக் கொன்று 57 துண்டுகளாக வெட்ட அவர் திட்டமிட்டிருந்த நிலையில், அவரது பேரன் அவரது அறைக்கு வரவே, அவரது திட்டம் தடைபட்டுள்ளது.
தகவலறிந்து பொலிசார் பீர்பால் வீட்டுக்கு வரும்போது, துண்டாக்கப்பட்ட தன் மனைவியின் உடலுக்கு அருகே உட்கார்ந்திருந்த பீர்பால், அமைதியாக பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்.
அவர் பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், 1989ஆம் ஆண்டு தன் முதல் மனைவி மரணமடைந்ததாகவும், அப்போது தன் மாமா தன்னை வற்புறுத்தி சுமந்தியை திருமணம் செய்யவைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
வேலை நிமித்தமாக நகரத்துக்குச் சென்ற தான் தன் பிள்ளைகளையும் வளர்த்துவர, சுமந்தியோ கிராமத்திலேயே தங்கிவிட்டாராம்.
தன் மாமாவை கவனித்துக்கொள்வதற்காக அவர் கிராமத்தில் தங்கிவிட்ட நிலையில், நான்கு மகன்கள் ஒரு மகளை வளர்த்து ஆளாக்கி, அவர்கள் எல்லோருக்கும் திருமணமும் செய்துவைத்துவிட்டு ஓய்வுபெற்றபின் கிராமத்துக்குத் திரும்பியுள்ளார் பீர்பால்.
அப்போதும், தன் மனைவி தன்னைவிட தன் மாமாவையே அதிகம் கவனித்துக்கொண்டதால் பீர்பாலுக்கு சந்தேகம் ஏற்படவே, கணவன் மனைவிக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது.
ஆக, திட்டமிட்டு, தங்கள் 57ஆவது திருமண நினைவு நாளில், தன் மனைவியாகிய சுமந்தியைக் கொண்டு கூறுபோட்டுவிட்டார் பீர்பால்.
தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பீர்பாலுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |