பீகார் தேர்தல் முடிவின் தாக்கம் - தவெக உடன் கூட்டணி அமைக்குமா காங்கிரஸ்? (வீடியோ)
பீகார் தேர்தல் முடிவின் தாக்கத்தால் தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா என பத்திரிக்கையாளர் சிவப்பிரியன் விளக்கமளித்துள்ளார்.
பீகார் தேர்தல் முடிவின் தாக்கம்
பீகார் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 243 இடங்களில், 202 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

பாஜக 89 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதில், மகாகத்பந்தன் கூட்டணியில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், பீகார் தேர்தல் முடிவுகள் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலின் தொகுதி பங்கீட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா, காங்கிரஸ் தவெக உடன் கூட்டணி அமைக்குமா என்பது குறித்து பத்திரிக்கையாளர் சிவப்பிரியன் விளக்கமளித்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |