அரசு திட்டங்களை பரப்பும் வீடியோவிற்கு ரூ.1 லட்சம் - வாரி வழங்கும் பீகார் அரசு
bihar to pay creators for government scheme video: அரசு திட்டங்களை பரப்பும் வீடியோவிற்கு ரூ.1 லட்சம் வரை வழங்க பீகார் அரசு முன்வந்துள்ளது.
அரசு திட்டங்களை பரப்பும் வீடியோவிற்கு பணம்
முன்னதாக அரசு தங்களது திட்டங்கள் மற்றும் சாதனைகளை நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடங்கங்களில் மட்டுமே விளம்பரப்படுத்தி வந்தது.
இளைய தலைமுறையினர் சமூக ஊடகங்களை அதிகளவில் பயன்படுத்தி வருவதால், தற்போது சமூக ஊடகங்களிலும் விளம்பரப்படுத்தி வருகிறது.

இதே போல் அரசின் நலத்திட்டங்கள் குறித்து வீடியோ வெளியிடும் சமூகஊடக படைப்பாளிகளுக்கு பீகார் மாநில அரசு பணம் வழங்க உள்ளது.
இதில் அரசின் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பான வீடியோக்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு 1 லட்சம் பார்வைகளுக்கும், சமூக ஊடகப் படைப்பாளிகளுக்கு ரூ.10,000 வழங்கும். ஒரு வீடியோவிற்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.
மாநில அரசின் கீழ் பதிவு செய்யப்பட்ட சமூகஊடக பக்கங்கள் மற்றும் சேனல்கள் மட்டுமே இதில் பங்குபெற முடியும்.
வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் நிறைவடைந்த பின்னரே அதற்கான பார்வைகளை சரிபார்த்து அரசு பணத்தை வழங்கும்.
பிரிவுகள், தகுதி நிபந்தனைகள், கட்டண விதிகளை விவரிக்கும் ஒரு விரிவான அறிவிப்பை, தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை வெளியிடும் என்று அமைச்சரவை தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |