மணல் கடத்தலை தடுத்த பெண் அதிகாரி: கற்களை வீசி தரதரவென இழுத்து சென்ற கும்பல்! வீடியோ
பீகாரில் மணல் கடத்தலை தடுக்க சென்ற அதிகாரியை கும்பல் ஒன்று கல்வீசி சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்வீசி தாக்குதல்
பீகார் தலைநகர் பாட்னாவில் மணல் கடத்தல் தொடர்பான ரகசிய தகவல் மாவட்ட கனிம வளத் துறைக்கு வந்தது.
இந்த தகவலின் அடிப்படையில், கனிமவளத் துறையின் பெண் அதிகாரி அம்யாகுமாரி, 2 ஆய்வாளர்களுடன் மணல் கடத்தல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்தனர்.
Another #viralvideo from #Bihar.
— Zahid Hasan (@ZahidHa68) April 18, 2023
Shameful #TejashwiYadav
In #Bihar the female inspector of the mining department is being dragged and beaten.?#BiharPolice #UPPolice #AtiqueAhmed #RCBvsCSK #MSDhoni? #Prayagraj #TejRan #ViratKohli pic.twitter.com/7xCVeUOlmq
இதை சுதாரித்து கொண்ட கும்பல், அங்கிருந்து சில மணல் லாரிகள் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேற்றினர்.
மேலும் ஆய்வுக்கு வந்த கனிம வளத்துறை அதிகாரிகளை சுற்றி வளைத்து மணல் கடத்தலில் ஈடுபட்டு இருந்த கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
அதிகாரியை தரதரவென இழுத்துச் சென்ற கும்பல்
அத்துடன் இந்த கல்வீச்சு சம்பவத்தின் போது கீழே விழுந்த பெண் அதிகாரி அம்யா குமாரியை கடத்தல் குழுவை சேர்ந்த ஒருவர் கைகளை பிடித்து தரதரவென இழுத்துச் சென்றுள்ளார்.
மேலும் சிலர் அவரை தீட்டிய படியே அவர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்துகிறார்கள், இதில் உடன் சென்ற இரண்டு ஆய்வாளர்களும் படுகாயம் அடைந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதற்கிடையில் அரசு அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தகவலறிந்து விரைந்த பாட்னா எஸ்.பி ராஜேஷ் குமார் தலைமையிலான பொலிஸார் குழு மணல் குவாரியில் சோதனை மேற்கொண்டு 44 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.