இரவு பகலாக ரசகுல்லா விற்றவர்.., வெளிநாடுகளில் கிளைகள் தொடங்கி ரூ.1,300 கோடியில் வருமானம்
இந்தியாவில் பிரபலமான ஸ்வீட் மற்றும் கார வகைகளை தயாரித்த 86 வயதுடைய லாலா கேதார்நாத் அகர்வாலை பற்றி தான் பார்க்க போகிறோம்.
லாலா கேதார்நாத் அகர்வால்
பிகனெர்வாலாவின் உரிமையாளரான லாலா கேதார்நாத் அகர்வால் (86) கடந்த நவம்பர் 13 -ம் திகதி காலமானார். இவரது குடும்பம் பிகனாரை பூர்வீகமாக கொண்டது. இவர், முதன் முதலாக தன்னுடைய தொழிலை இந்திய தலைநகர் டெல்லியில் தொடங்கினார்.
1905 -ம் ஆண்டு முதல் பிகானர் நம்கீன் பண்டர் என்னும் ஸ்வீட் கடையை தொடங்கினர். பின்னர், 1950 -ம் ஆண்டில் அகர்வாலும் அவரது சகோதருமான சத்யநாராயணன் அகர்வாலும் டெல்லிக்கு குடிபெயர்ந்தனர்.
இவர்கள், தொழிலின் தொடக்கத்தில் பல சிக்கல்களை எதிர்கொண்டனர். புஜியா, ரசகுல்லாக்களை கொண்டு பக்கெட்டுகளில் கொண்டு சென்று இரவு பகலாக உழைத்தவர். பின்னர், இவர்களுடைய பொருள்களின் சுவையாக இருந்ததால் வியாபாரம் பெருக தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள சாந்தினி சௌக்கில் ஒரு ஸ்வீட் ஸ்டாலை திறந்தனர். அங்கு, டால் ஹல்வா, பிகானர் புஜ்ஜியா, காஜு கட்டி ஆகியவற்றை விற்பனை செய்தனர். இதனால், இவர்களது பிகனெர்வாலா கடை பிரபலமடைந்தது.
ரூ.1.300 கோடி வருமானம்
டெல்லி, நொய்டா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இவருடைய கிளைகள் திறக்கப்பட்டன. அங்கு, தனித்துவமான ஸ்வீட்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்தியாவில் 60 கிளைகள் மட்டுமல்லாமல் ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, நியூஜிலாந்து, சிங்கப்பூர், நேபாளம் உள்பட பல நாடுகளிளும் கிளைகள் திறக்கப்பட்டன.
இவர்களது தனித்துவமான சுவையால் அங்கும் மக்கள் வரவேற்பை பெற்றது. தற்போது, இவருடைய வருமானம் ரூ.1,300 கோடி வருவாய் ஈட்டும் அளவிற்கு பிகனெர்வாலா நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |