கோடீஸ்வரர் பில் கேட்ஸின் மிக ஆபத்தான உடல்நிலை குறித்து தவறுதலாக வெளியிட்ட அவர் மகள்
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், ஆஸ்பெர்கர் நோய்க்குறியால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அவரது மகள் ஃபோப் கேட்ஸ் தவறுதலாக வெளியிட்டது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.
ஃபோப் கேட்ஸ் வெளியிட்ட தகவல்
அப்படியான நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பில் கேட்ஸ் ஒருபோதும் பகிரங்கமாக இதுவரை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரமில் உள்ள பண்புகளுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதை அவர் முன்பு ஒப்புக்கொண்டிருந்தார்.
தற்போது அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் நேரிடையாக இது தொடர்பில் வெளிப்படுத்தியுள்ளார். ஃபோப் கேட்ஸ் தவறுதலாக வெளியிட்ட தகவல் தற்போது சமூக ஊடக பக்கங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
கண்டறியப்பட்டிருக்கலாம்
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பில் பில் கேட்ஸ் இதுவரை கருத்தேதும் தெரிவிக்கவில்லை. ஆனால் 2023ல் அவர் வெளியிட்டுள்ள நினைவுக்குறிப்பில், தற்போதைய சூழலில் தாம் வளர்ந்திருந்தால் தமக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டிருக்கலாம் என்று கேட்ஸ் பதிவு செய்திருந்தார்.
மட்டுமின்றி தமது குழந்தை பருவத்தில் எதிர்கொண்ட நெருக்கடிகள் தொடர்பிலும் அந்த நூலில் அவர் குறிப்பிட்டிருந்தார். என் பெற்றோர், ஒருவேளை தற்செயலாக, அப்போது நோய் கண்டறிதல் இல்லாததால் இருக்கலாம் என்று நான் நிச்சயமாக நினைக்கிறேன், ஆனால் அவர்கள் எனக்கு விடயங்களை விளக்கிய விதம் அல்லது என்னைப் பழகத் தூண்டிய விதம் மிகவும் உதவியாக இருந்தது என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |