உலகம் எப்போது கொரோனா பிடியிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பும்? கணிப்பை வெளிப்படையாக கூறிய பில் கேட்ஸ்
உலகம் எப்போது கொரோனா பிடியிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பும் என்பது குறித்து அமெரிக்க தொழிலதிபர் பில் கேட்ஸ் கணித்துள்ளார்.
போலந்து செய்தித்தாள் ஒன்றிற்கு பேட்டியளித்த பில் கேட்ஸ், கொரோனா தொற்று நம்பமுடியாத துயரம், ஒரே ஒரு நல்ல விஷயம் என்வென்றால் தடுப்பூசி கிடைத்தது தான்.
2022 இறுதியில் உலகம் கொரோனா பிடியிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பும், கொரோனா தடுப்பூசிக்கு நன்றி என பில் கேட்ஸ் கூறினார்.
கொரோனா வைரஸ் தாக்கம் குறித்தும் அதனால் ஏற்படும் விளைவு குறித்தும் பில் கேட்ஸ் முன்னதாகவே கணித்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
2014 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகிய பில் கேட்ஸ், தனது பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம் கொரோனா தொற்றுநோய்க்கான உலகளாவிய நடவடிக்கைக்கு குறைந்தபட்சம் 1.75 பில்லியன் டொலர் நிதியளித்துள்ளார்.
