பில் கேட்ஸை புறக்கணிக்கும் Microsoft., எப்ஸ்டீன் தொடர்பு காரணமா?
ஒரு காலத்தில் உலகின் மிகவும் போற்றப்பட்ட மனிதராக இருந்த பில் கேட்ஸ், தற்போது பல முக்கிய நிகழ்வுகளில் புறக்கணிக்கப்படுகிறார்.
சமீபத்தில், அவர் உருவாக்கிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வருடாந்திர CEO உச்சிமாநாட்டிலேயே அவர் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பில் கேட்ஸ், மைக்ரோசாப்டின் இணை நிறுவனர் என்ற பெருமையிலிருந்து, உலகின் மிகப்பெரிய கோடை வள்ளல்களில் (philanthropists) ஒருவராக தனது பிம்பத்தை மாற்றியிருந்தார்.

யூகோவ் கணக்கெடுப்பில் தலாய் லாமா, போப் பிரான்சிஸ் போன்றவர்களை விட முன்னணியில் இருந்தவர். ஆனால், ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் இருந்த தொடர்புகள் வெளிப்படத் தொடங்கியதால், அவரது பொது பிம்பம் சிதைந்துவிட்டது.
இதன் விளைவாக, மைக்ரோசாப்ட் CEO மாநாட்டில் அவர் பங்கேற்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வழக்கமாக, கேட்ஸ் தனது வாஷிங்டன் வீட்டில் பங்கேற்பாளர்களுக்கு விருந்து அளிப்பார். ஆனால் இந்த ஆண்டு, அந்த அழைப்பு திரும்பப் பெறப்பட்டது.
இதற்கிடையில், இந்த ஆண்டு பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்திலும் கேட்ஸ் ஓரங்கட்டடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் நடைபெற்ற AI Impact Summit-இலும், எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் வெளிவந்ததால், கேட்ஸ் முக்கிய உரையாற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |