கடைசி நொடியில்... இந்திய AI உச்சிமாநாட்டில் இருந்து வெளியேறிய பில் கேட்ஸ்

Bill Gates
By Arbin Feb 19, 2026 06:15 AM GMT
Report

இந்திய AI உச்சிமாநாட்டில் முக்கிய உரையாற்றவிருந்த பில் கேட்ஸ், நிகழ்ச்சி தொடங்கவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

உரையை வழங்க மாட்டார்

சீன தயாரிப்பான ரோபோவை பயன்படுத்திய விவகாரத்தில் ஏற்கனவே இந்திய AI உச்சிமாநாடு விவாதத்தில் சிக்கியுள்ள நிலையில், தற்போது பில் கேட்ஸ் விவகாரம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கடைசி நொடியில்... இந்திய AI உச்சிமாநாட்டில் இருந்து வெளியேறிய பில் கேட்ஸ் | Bill Gates Skip India Ai Summit

ஆனால், AI உச்சிமாநாட்டின் முக்கிய முன்னுரிமைகளில் கவனம் செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, பில் கேட்ஸ் தனது உரையை வழங்க மாட்டார் என்று கேட்ஸ் அறக்கட்டளை விளக்கமளித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்புதான், அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என்பது குறித்த வதந்திகளை கேட்ஸ் அறக்கட்டளை நிராகரித்தது, மேலும் அவர் கலந்துகொள்ளும் முனைப்பில் இருப்பதாகவும் வலியுறுத்தியது.

முடிவு செய்துவிட்ட ட்ரம்ப்... மத்திய கிழக்கில் ஆயுதங்களைக் குவிக்கும் அமெரிக்கா

முடிவு செய்துவிட்ட ட்ரம்ப்... மத்திய கிழக்கில் ஆயுதங்களைக் குவிக்கும் அமெரிக்கா

இந்த நிலையில், வியாழக்கிழமை திட்டமிட்டதன் அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவஒல் மேக்ரான், கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, OpenAI தலைமை நிர்வாக அதிகாரி Sam Altman மற்றும் Anthropic தலைமை நிர்வாக அதிகாரி Dario Amodei ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.

ஏற்கனவே, Nvidia நிறுவனத்தின் Jensen Huang கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் அவர் மறுத்துள்ள நிலையில், தற்போது பில் கேட்ஸும் வெளியேறியுள்ளது கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. 

கடைசி நொடியில்... இந்திய AI உச்சிமாநாட்டில் இருந்து வெளியேறிய பில் கேட்ஸ் | Bill Gates Skip India Ai Summit

எப்ஸ்டீன் விவகாரத்தில்

உலகளாவிய AI நிர்வாகத்தில் இந்தியா தன்னை ஒரு முன்னணி குரலாக நிலைநிறுத்திக் கொள்ள முயன்று வரும் நிலையில், உலகளாவிய தெற்கில் முதல் பெரிய செயற்கை நுண்ணறிவு மன்றமாகக் கருதப்படும் உச்சிமாநாட்டிற்கு இது ஒரு கடினமான தொடக்கமாகவே அமைந்துள்ளது.

எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கியுள்ள பில் கேட்ஸ் கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையிலேயே, இந்திய AI உச்சிமாநாட்டில் இருந்து வெளியேறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடைசி நொடியில்... இந்திய AI உச்சிமாநாட்டில் இருந்து வெளியேறிய பில் கேட்ஸ் | Bill Gates Skip India Ai Summit

எப்ஸ்டீனின் சிறைத்தண்டனைக்குப் பிறகு, கேட்ஸின் தொண்டு நிறுவன முயற்சிகளை விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்க கேட்ஸ் மற்றும் எப்ஸ்டீன் பலமுறை சந்தித்ததாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

இந்த உறவு தொண்டு நிறுவனம் தொடர்பான விவாதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது என்றும், எப்ஸ்டீனை சந்தித்தது தனக்கு ஏற்பட்ட தவறு என்றும் கேட்ஸ் கூறியுள்ளார்.

மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனரான பில் கேட்ஸ் கடந்த 2000 ஆண்டு கேட்ஸ் அறக்கட்டளையைத் தொடங்கினார். உலகளாவிய சுகாதார முயற்சிகளின் உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனங்களில் ஒன்று இது என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்

You May Like This


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US