முடிவு செய்துவிட்ட ட்ரம்ப்... மத்திய கிழக்கில் ஆயுதங்களைக் குவிக்கும் அமெரிக்கா

Donald Trump Iran Middle East
By Arbin Feb 19, 2026 03:16 AM GMT
Report

ஈரானில் இராணுவத் தாக்குதல்கள் குறித்து டொனால்ட் ட்ரம்ப் விரைவில் ஒரு முடிவை எடுக்கக்கூடும் என்ற நிலையில், அமெரிக்க இராணுவம் இந்த வார இறுதியில் தாக்குதலைத் தொடங்கத் தயாராகி வருகிறது.

ஜனாதிபதி அனுமதி

ஈரானுக்கு எதிராக ஒரு சாத்தியமான தாக்குதலைத் திட்டமிட்டுவரும் அமெரிக்க இராணுவம், சமீபத்திய நாட்களில் மத்திய கிழக்கில் ஆயுதங்களைக் குவித்து வந்துள்ளது.

முடிவு செய்துவிட்ட ட்ரம்ப்... மத்திய கிழக்கில் ஆயுதங்களைக் குவிக்கும் அமெரிக்கா | Trump Identifies Date Strike On Iran

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்ப் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவே தகவல் கசிந்துள்ளது. இருப்பினும், இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு மன நிலையில் இருந்தாலும், ஈரானுடன் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தவும் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.

மட்டுமின்றி, ஈரான் தொடர்பில் ஒரு முடிவெடுக்கும் பொருட்டு தமது நெருக்கமான வட்டாரத்திலும் இராணுவ ஆலோசகர்கள் மட்டத்திலும் ட்ரம்ப் கருத்துக் கோரியுள்ளார்.

ஆனால் ட்ரம்ப் எப்போது இறுதி முடிவை எடுப்பார் என்பது குறித்து உறுதியானத் தகவல் இல்லை. இந்த நிலையில், புதன்கிழமை கசிந்த தகவலில், ஈரானுக்கு எதிரான மிகப்பெரிய, வாரக்கணக்கான இராணுவ நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி அனுமதி அளிக்கும் தருவாயில் உள்ளார், இது முழுமையான போராகக் கருதப்படும் என கூறப்பட்டது.

முப்பது நிமிடங்களில் மூன்று எச்சரிக்கை... ட்ரம்பை குறிவைத்த ஈரானின் காமெனி

முப்பது நிமிடங்களில் மூன்று எச்சரிக்கை... ட்ரம்பை குறிவைத்த ஈரானின் காமெனி

இஸ்ரேலின் அழுத்தத்தின் அடிப்படையில் ட்ரம்ப் முன்வைத்த அனைத்து அணுசக்தி திட்டங்களையும் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை ஈரான் நிராகரித்ததாகவே கூறப்படுகிறது.

இதனையடுத்தே இராணுவ நடவடிக்கை தொடர்பில் ட்ரம்ப் அனுமதி அளிக்கக் கூடும் என்ற தகவல் கசிந்தது. மேலும், அப்படியான ஒரு நடவடிக்கை ட்ரம்ப் முன்னெடுப்பார் என்றால், அது அலி காமெனியை உயிருடனோ அல்லது சடலமாகவோ மீட்கும் ஒரு நடவடிக்கையாக இருக்கும் என்றே கூறப்பட்டது.

மேலும், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இஸ்ரேலும் களமிறங்கும் என்றும் கூறப்பட்டது. 2003 ஆம் ஆண்டு ஈராக் போருக்குப் பிறகு நடக்கவிருக்கும் மிகப்பெரிய இராணுவ படையெடுப்பாக இந்தப் போர் இருக்கும் என்றும், இது ட்ரம்பின் எஞ்சியுள்ள பதவி காலத்திற்கு பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது.

முடிவு செய்துவிட்ட ட்ரம்ப்... மத்திய கிழக்கில் ஆயுதங்களைக் குவிக்கும் அமெரிக்கா | Trump Identifies Date Strike On Iran

பெரும்பான்மையைப் பாதுகாக்க

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் முன்னேறி வரும் நிலையிலும், ஈரானுக்கு அருகே ட்ரம்ப் ஆயுதங்களைக் குவித்து வந்துள்ளார். இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்கள், ஒரு டசின் போர்க்கப்பல்கள் மற்றும் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய நூற்றுக்கணக்கான போர் விமானங்களும் தயார் நிலையில் உள்ளன.

முடிவு செய்துவிட்ட ட்ரம்ப்... மத்திய கிழக்கில் ஆயுதங்களைக் குவிக்கும் அமெரிக்கா | Trump Identifies Date Strike On Iran

கடந்த 24 மணி நேரத்தில் 150 இராணுவ சரக்கு விமானங்கள் அமெரிக்க மத்திய கிழக்கு தளங்களுக்கு ஆயுத அமைப்புகள் மற்றும் வெடிமருந்துகளை விரைவாக மாற்றத் தொடங்கியுள்ளன.

F-35s, F-22s மற்றும் F-16s உட்பட டசின் கணக்கான அமெரிக்க போர் விமானங்கள், சமீபத்திய நாட்களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள தளங்களை விட்டு மத்திய கிழக்கு நோக்கிச் சென்றுள்ளன.

85க்கும் மேற்பட்ட எரிபொருள் கப்பல்களும் 170க்கும் மேற்பட்ட சரக்கு விமானங்களும் மத்திய கிழக்குப் பகுதிக்கு விரைந்துள்ளன. மட்டுமின்றி, குடியரசுக் கட்சியினர் நாடாளுமன்றத்தில் தங்கள் பெரும்பான்மையைப் பாதுகாக்க போராடி வரும் நிலையில்,

முடிவு செய்துவிட்ட ட்ரம்ப்... மத்திய கிழக்கில் ஆயுதங்களைக் குவிக்கும் அமெரிக்கா | Trump Identifies Date Strike On Iran

ட்ரம்ப் வெறும் ஒரு வாய்ச்சவடால் ஜனாதிபதியாக அறியப்படுவதைத் தவிர்க்கவும் ஈரானுடனான இந்தப் போரை அமெரிக்கா பயன்படுத்தக் கூடும்.

இதனிடையே, Hormuz நீரிணையை மூடிவிட்டு ஈரான் இராணுவப் பயிற்சிகளை துவங்கியுள்ளதை அடுத்தே, ட்ரம்பின் இராணுவ நடவடிக்கை ஆயத்தங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US