கொரோனா இன்னும் முடியல! இனி தான் ஆரம்பம்.. பீதியை கிளப்பும் பில்கேட்ஸ்
உலகளவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து பில் கேட்ஸ் சில அதிர்ச்சிகர தகவல்களை வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று வரை முடிந்தபாடில்லை. இந்த கொடிய வைரஸால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு பலர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா, டெல்டா, Omicron என பல வகை வைரஸ் அடுத்தடுத்து தாக்கி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் தடுப்பூசி செலுத்த தொடங்கியதையடுத்து உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வந்துள்ளது.
இதையயடுத்து விரைவில் கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் முழுவதுமாக குறையும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பில் கேட்ஸ் உலகளவில் கொரோனா பரவல் ஆபத்து குறைந்து வருகிறது.
ஆனால் கொரோனா மட்டுமே இறுதியானது அல்ல. கொரோனாவை போல மற்றொரு பெருந்தொற்று தாக்கும் அபாயம் உள்ளது என தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்தாலும் மீண்டும் புதிய வைரஸ் உருவாக வாய்ப்புள்ளதாக பில் கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.