கொரோனாவின் மோசமான முகம் இனிதான் வெளிப்படப்போகிறது... விடுமுறையை ரத்து செய்துள்ள பில் கேட்ஸ் எச்சரிக்கை
கொரோனாவின் மோசமான முகம் இனிதான் வெளிப்படப்போகிறது என்று கூறியுள்ள பில் கேட்ஸ், தனது நெருங்கிய நண்பர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளதைத் தொடர்ந்து, தனது விடுமுறைத் திட்டங்களை ரத்து செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
தன்னை ட்விட்டரில் பின்தொடரும் 56.5 மில்லியன் பேருக்கு இந்த செய்தியைத் தெரிவித்துள்ள பில் கேட்ஸ், Omicron வகை கொரோனா வைரஸ் வரலாற்றில் உள்ள எந்த வைரஸைக் காட்டிலும் வேகமாக பரவிவருவதால், அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
வாழ்க்கை மீண்டும் சாதாரண நிலைமைக்கு திரும்பும் என்பது போல காணப்பட்ட நேரத்தில், கொள்ளைநோயின் மோசமான பகுதிக்கு திரும்பும் ஒரு நிலை ஏற்படலாம் என்று கூறியுள்ள அவர், Omicron நம் எல்லோரையும் தாக்கும் நிதர்சன நிலை உருவாகும் என்றும், தனது நெருங்கிய நண்பர்களையும் அது தாக்கியுள்ளது என்றும், அதனால், தனது விடுமுறை திட்டங்கள் அனைத்தையும் தான் ரத்து செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.