Omicron தொடர்பில் பில்கேட்ஸ் விடுத்துள்ள எச்சரிக்கை
உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கும் Omicron அதிதீவரமாக பரவி வருவதாக அச்சம் தெரிவித்துள்ளார் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்.
Omicron வைரஸ் தொடர்பில் பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், உலகம் முழுவதும் Omicron பாதிப்பு அதிவேகமாக உயர்கிறது.
நாம் கொரோனா பெருந்தொற்றின் மிகவும் மோசமான கட்டத்திற்குள் நுழைய இருக்கிறோம்.
எனக்கு நெருக்கமான நண்பர்கள் பலர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான் எனது விடுமுறை திட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டேன்.
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இது கூடிய விரைவில் பரவிவிடும். Omicron எந்தவிதமாக நோய்வாய்ப்படுத்தும் எனத் தெரியவில்லை.
டெல்டாவை விட 50 சதவீதம் தீவிரமானதாக இருந்தாலும் கூட, இதுவரை நாம் பார்த்ததில் மிக அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தவுள்ளது. ஏனெனில், இது மிக வேகமாக பரவும் தன்மை கொண்டது.
I know it’s frustrating to go into another holiday season with COVID looming over us. But it won’t be like this forever. Someday the pandemic will end, and the better we look after each other, the sooner that time will come.
— Bill Gates (@BillGates) December 21, 2021
எனவே, முகக்கவசம் அணிவது, பெரிய கூட்டங்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். பூஸ்டர் டோஸை செலுத்தி கொள்வது சிறப்பான பாதுகாப்பை அளிக்கும்.
அமெரிக்காவில் ஒரே வாரத்தில் Omicron பாதிப்பு 3 சதவீதத்தில் இருந்து 73 சதவீதமாக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், இதில் நல்ல செய்தி என்னவென்றால், Omicron அலையால் ஒரு நாடு பாதிக்கப்பட்டால் 3 மாதங்கள் வரை பாதிப்பு இருக்கும், பிறகு குறைந்துவிடும்.
ஒருநாள் இந்த பெருந்தொற்று முடிவுக்கு வரும், நாம் ஒருவருக்கொருவர் பாதுகாத்துக்கொண்டால் விரைவில் அந்த நாள் வரும் எனவும் தெரிவித்துள்ளார்.