உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஆதரவாளரான கோடீஸ்வரர் அதிரடி கைது: அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

Volodymyr Zelenskyy Ukraine
By Arbin Sep 03, 2023 05:05 PM GMT
Report

உக்ரைனின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரும், ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் ஆதரவாளருமான நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைகேடு வழக்கில் கைது

பணமோசடி மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளுக்காக அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2015ல் Ihor Kolomoisky என்பவரின் சொத்து மதிப்பு 1.36 பில்லியன் டொலர் என பதிவு செய்யப்பட்டது.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஆதரவாளரான கோடீஸ்வரர் அதிரடி கைது: அதிகாரிகள் வெளியிட்ட தகவல் | Billionaire Backed Zelensky Presidency Arrested Picture: REX

தற்போது முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள 63 வயதான Ihor Kolomoisky இரண்டு மாதம் விசாரணைக் கைதியாக இருப்பார் என்றே நீதிமன்ற தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கும் முன்னர் தமது கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கிகள் ஊடாக சுமார் 13.5 மில்லியன் டொலர் தொகையை வெளிநாடுகளில் பதுக்கியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

2013 முதல் 2020 வரையில் அவர் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போர் சூழலில் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு இடமில்லை என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறி வரும் நிலையிலேயே Ihor Kolomoisky கைதாகியுள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஆதரவாளரான கோடீஸ்வரர் அதிரடி கைது: அதிகாரிகள் வெளியிட்ட தகவல் | Billionaire Backed Zelensky Presidency Arrested @reuters

உக்ரைனைக் கொள்ளையடித்து

கைது தொடர்பில் மேல்முறையீடு செய்யப்படும் என அவரது சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் 14 மில்லியன் டொலர் செலுத்தி பிணையில் வெளிவர அவர் மறுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, நாட்டு மக்களுக்காக அன்றாடம் வெளியிடும் காணொளி உரையில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சர்ச்சைக்குரிய வழக்கைக் குறிப்பிடத் தவறவில்லை என்றே கூறப்படுகிறது.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஆதரவாளரான கோடீஸ்வரர் அதிரடி கைது: அதிகாரிகள் வெளியிட்ட தகவல் | Billionaire Backed Zelensky Presidency Arrested @reuters

மேலும், உக்ரைனைக் கொள்ளையடித்து, சட்டத்திற்கு மேல் தங்களைத் தாங்களே முன்னிறுத்திக் கொண்டவர்கள் வழக்கம் போல் இனி செயல்பட முடியாது என்று ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

முன்னர், ஜனாதிபதி தேர்தலின் போது கோடீஸ்வரர் Ihor Kolomoisky-ன் கைப்பாவையாக ஜெலென்ஸ்கி செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மட்டுமின்றி, Ihor Kolomoisky-ன் சொந்த தொலைக்காட்சியில் தான் ஜெலென்ஸ்கியின் ஜனாதிபதி நாடகம் ஒளிப்பரப்பானது.

ஆனால் அந்த தொழிலதிபருக்கு தமது அரசாங்கத்தில் எந்த செல்வாக்கும் இல்லை என்று ஜெலென்ஸ்கி பலமுறை மறுப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US