5 நட்சத்திர ஓட்டல் போன்ற வீடு, தனியார் ஜெட் விமானம்., கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவரின் சொத்து மதிப்பு எவ்வளவு?
கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் 5 நட்சத்திர ஓட்டல் போன்ற வீடு, தனியார் ஜெட் விமானம் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா (Ismail Haniyeh) ஈரானில் கொல்லப்பட்டார்.
ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெஸஷ்கியானின் (Masoud Pezeshkian) பதவியேற்பு விழாவில் பங்கேற்க இஸ்மாயில் ஹனியா வந்திருந்தார்.
அப்போது, ஈரானின் தெஹ்ரானில் உள்ள குடியிருப்பு மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹனியார் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிக்கை வெளியிட்டது. இதுவரை இஸ்ரேல் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.
ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்ற பிரமாண்ட பங்களாவும், 25க்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களும், தனியார் ஜெட் விமானமும் இருந்தது. இஸ்மாயில் ஹனியா பெரும் செல்வந்தராகவும் ஆடம்பரமாகவும் வாழ்ந்துள்ளார்.
2017-ஆம் ஆண்டில், காசா பகுதிக்குள் நுழைய இஸ்மாயில் ஹனியாவுக்கு எகிப்து தடை விதித்தது. அதன் பின்னர் இஸ்மாயில் ஹனியா துருக்கியிலும் கத்தார் தலைநகர் தோஹாவிலும் வசித்து வருகிறார்.
இஸ்மாயிலின் சொத்து மதிப்பு 4 பில்லியன் டொலர் (இலங்கை பணமதிப்பில் ரூ. 12,09,61 கோடி) என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்மாயில் தோஹாவில் ஒரு பாரிய பென்ட்ஹவுஸுடன் ஒரு ராஜாவைப் போல வாழ்ந்தார். இந்த பென்ட்ஹவுஸ் ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்ற அனைத்து வசதிகளையும் கொண்டிருந்தது.
25க்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களை வைத்திருக்கும் இஸ்மாயில், தொலைதூர பயணத்துக்காக தனி ஜெட் விமானமும் வைத்துள்ளார்.
இஸ்மாயில் ஹனியா காசாவிலிருந்து வெகு தொலைவில் இருந்தாலும், அதன் பொருளாதாரத்தின் மீது முழுக் கட்டுப்பாட்டை வைத்திருந்தார். காசாவில் இருந்து எகிப்து வரையிலான சுரங்கப்பாதை மூலம் அதிக பணம் சம்பாதித்து வந்தார்.
இந்த சுரங்கப்பாதை வழியாகத்தான் எகிப்திய பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இஸ்மாயில் ஹனியா இந்த சுரங்கப்பாதையின் பயன்பாட்டிற்காக பெரும் வரிகளை விதித்தார்.
2014-இல் வெளியிடப்பட்ட இஸ்ரேலிய அறிக்கையின்படி, இஸ்மாயில் ஹனியா மற்றும் ஹமாஸ் தலைவர்கள் சுரங்கப்பாதை வழியாக நடத்தப்படும் வர்த்தகத்திற்கு 20 சதவீதம் வரை வரி விதித்தனர்.
இந்த சுரங்கப்பாதை வியாபாரத்தின் மூலம்தான் 1,700 ஹமாஸ் தலைவர்களும் அதிகாரிகளும் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
ismail haniyeh net worth, hamas leader ismail haniyeh net worth, hamas leader ismail haniyeh