சிறையிலிருந்து தப்பிக்க கோடீஸ்வரர் போட்ட திட்டம்: திரைப்படத்தை மிஞ்சும் சம்பவம்
பிரான்ஸ் மற்றும் அமெரிக்கக் குடியுரிமை கொண்ட ஒரு கோடீஸ்வரர், சிறார் பாலியல் குற்றங்களுக்காக அமெரிக்கச் சிறை ஒன்றில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சிறையிலிருந்து தப்பிக்க பெரிய திட்டம் தீட்டியுள்ளார்.
திரைப்படத்தை மிஞ்சும் சம்பவம்
இரட்டைக் குடியுரிமை கொண்டவரான John Manchec (78) ஒரு கோடீஸ்வரர். அவர் அமெரிக்கச் சிறை ஒன்றில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சிறையிலிருந்து தப்புவதற்கு பெரிய திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளார்.
அவருக்கு உடந்தையாக சில சிறை ஊழியர்களும், சக கைதிகள் சிலரும் திட்டத்தில் பங்கேற்க உறுதியளித்துள்ளனர்.
CBS News
அதாவது, தனது பணத்தைப் பயன்படுத்தி சக கைதி ஒருவருக்கு ஜாமீன் பெற்றுத்தந்துள்ளார் Manchec. அந்த நபர், Manchec வீட்டில் தங்கியிருந்து, அவருடைய துணிமணிகள் முதலான பொருட்களை சூட்கேசில் அடைத்து எடுத்துவர சம்மதித்துள்ளார்.
Manchec சிறையிலிருந்து தப்புவதற்காக அவரது சகாக்கள் ஒரு 140 அடி நீள படகு, ஒரு விமானம் ஆகியவற்றைத் தயார் செய்ததுடன், சகல வசதிகளும் கொண்ட ஒரு வேன் மற்றும் சில வாகனங்களையும் புதிதாக வாங்கியுள்ளார்கள்.
NBC 6
திட்டம் பொலிசாருக்குத் தெரியவந்தது எப்படி?
சிறையிலிருந்து தப்பி பிரான்சிலிருக்கும் தனது அரண்மனைக்கு செல்லத் திட்டமிட்டுள்ளார் Manchec.
உடல் நலம் சரியில்லை என்று கூறி, மருத்துவமனைக்குச் செல்லவும், Manchec சிறைக்கு வெளியே சென்றிருந்த நேரத்தில், அவரது கூட்டாளிகள் பாதுகாவலர்கள் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்துவிட்டு, Manchecஐ அவரது விமானம் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லவும், அவர் விமானத்தில் பிரான்சுக்கு பறந்து செல்வதெனவும் திட்டமிடப்பட்டுள்ளது.
An elaborate jail escape plan by a 78-year-old John Manchec, who had previously fled to France following his 2014 arrest on child pornography charges, was foiled and his alleged cohorts will be joining him behind bars. https://t.co/zNyJ9cOBTg
— CBS News Miami (@CBSMiami) May 23, 2023
அதற்குப் பிறகு சட்டத்தின் பிடியில் சிக்கவே கூடாது என எண்ணியிருந்த நிலையில், Manchecஉடன் திட்டத்தில் பங்கேற்ற ஒருவர் பொலிசாரிடம் விடயத்தைப் போட்டுக்கொடுத்துவிட்டார்.
அதைத் தொடர்ந்து Manchec சிறையிலிருந்து தப்பும் திட்டத்துக்கு உதவியாக இருந்த இரண்டு ஊழியர்களும் இரண்டு கைதிகளும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தப்ப முயற்சி செய்ததற்காக, Manchec மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
USA Today