2,500 மாணவர்களுக்கு தலா 1,000 டொலர் பரிசு! பட்டமளிப்பு விழாவில் ஆச்சரியப்படுத்திய அமெரிக்க பில்லியனர்
பட்டமளிப்பு விழாவில் தலா 1,000 டொலர் பணத்துடன் 2,500 மாணவர்களை ஆச்சரியப்படுத்தினார் அமெரிக்க கோடீஸ்வரர் Robert Hale.
2500 பட்டதாரி மாணவர்களுக்கும் 1000 டொலர் பரிசு
அமெரிக்காவில் பாஸ்டன் நகரத்தில் உள்ள Massachusetts பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அமெரிக்க பில்லியனர் ராபர்ட் ஹேல் சிறப்பு விருந்திரனாக கலந்துகொண்டார்.
விழாவில் பட்டம் பெற்ற 2500 பட்டதாரி மாணவர்களுக்கும் 500 டொலர் பணத்தாள் கொண்ட தலா இரண்டு கவர்களை (மொத்தம் 1000 டொலர்) பரிசாக கொடுத்தார். இந்த அந்த கவர்களில் ஒன்றில் Gift என்றும் மற்றொரு கவரில் Give என்றும் எழுதப்பட்டிருந்தது.
TMX
Gift கவர், Give கவர்
அதாவது Gift கவரில் இருக்கும் பணம் மாணவர்களுக்கே சொந்தமாக அவர் கொடுத்த பரிசு, ஆனால் Give என்ற கவரில் இருக்கும் பணத்தை அதாவது அந்த Give கவரை உண்மையில் தேவையில் இருக்கும் ஒரு நபருக்கோ அல்லது ஒரு அமைப்பிற்கோ மாணவர்களால் கொடுக்கப்படவேண்டும்.
இந்த விழாவில் பேசிய Robert Hale கூறியதாவது, "இது ஒரு தத்தளிப்பான காலக்கட்டம். ஆனால் இதில் நீங்கள் உயிர் பிழைத்த்துவிட்டீர்கள். நீங்கள் செழித்துவிட்டீர்கள். நீங்கள் கொண்டாடப்பட வேண்டும். நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள். இது எளிதானது அல்ல. நீங்கள் இவ்வளவு தூரம் முன்னேறி இங்கு வந்திருப்பதை நினைத்து பெருமைப்படுகிறோம்.
MICHAEL PRINCE FOR FORBES
இந்த கொண்டாட்டத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். நாங்கள் உங்களுக்கு இரண்டு பரிசுகளை வழங்க விரும்புகிறோம். முதலாவது உங்களுக்கு ஒரு பரிசு. இரண்டாவது, மற்றவருக்கு நீங்கள் கொடுக்கும் பரிசு'' என்று அறிவித்தார்.
துள்ளிக் குதித்து ஒரு நிமிடம் கைதட்டினர்
இதனைக் கேட்டதும் பட்டதாரிகள் மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்தனர், அறிவிப்பைத் தொடர்ந்து தொழிலாளர்கள் பைகளில் இருந்த பணக் கவர்களை வெளியே எடுத்தபோது சுமார் ஒரு நிமிடம் கைதட்டினர்.
"எங்கள் சமூகத்தின் அடுத்த தலைமுறை நீங்கள்., நீங்கள் பெறுவதை விட கொஞ்சம் அதிகமாகக் கொடுத்து, சில வாய்ப்புகளை எடுத்துக் கொண்டால், நீங்கள் மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறுவீர்கள். தோல்விக்கு பயப்பட வேண்டாம். அதை எதிர்க்கவும். அதன் காரணமாக நீங்கள் இன்னும் நிறைவான வாழ்க்கையைப் பெறுவீர்கள்”என்று கோடீஸ்வரர் ராபர்ட் ஹேல் கூறினார்.
இது முதல் முறையல்ல
இப்படி ஒரு ஆச்சரியத்தை அவர் வெளிப்படுத்துவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே, பாஸ்டனில் உள்ள ராக்ஸ்பரி சமூகக் கல்லூரியில் 150 பட்டதாரிகளுக்கு தலா $1,000 பரிசாக 2022 மே மாதம் வழங்கினார்.
Quincy கல்லூரியில் 2021 பட்டதாரிகளுக்கு இதேபோன்ற பரிசை வழங்கினார், அங்கு அவர் அனைத்து பட்டதாரி மாணவர்களுக்கும் $1,000 வழங்கினார்.
ஹேல் Granite Communications நிறுவனத்தின் தலைவர் ஆவார், இது மாசசூசெட்ஸின் குயின்சியில் அமைந்துள்ள பல இடங்களைக் கொண்ட வணிகங்களுக்கான தகவல் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமாகும்.
அவரது சொத்து மதிப்பு 5 பில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் அவர் தனிப்பட்ட முறையில் 280 மில்லியன் டொலருக்கும் மேலாக புற்றுநோய் ஆராய்ச்சி, கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.
US Dollar, Billionaire, Graduates, Gift Cover