அப்பாவின் ஆசைக்காக சென்றான்! டைட்டன் கப்பலில் உயிரிழந்த கோடீஸ்வரரின் மகன் குறித்து அத்தை வேதனை
டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் உயிரிழந்த பிரித்தானிய கோடீஸ்வரரின் மகன் விருப்பமே இல்லாமல் அதில் சென்றதாக அவரது அத்தை வேதனை தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த கோடீஸ்வரரின் மகன்
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் வெடித்ததில் இறந்த ஐந்து பேரில், பாகிஸ்தான்-பிரித்தானிய கோடீஸ்வரரின் மகனான சுலேமான் தாவூத்தும் (Suleman Dawood) ஒருவர். 19 வயதே ஆன சுலேமான் தாவூத், இந்த சாகச பயணத்தைப் பார்த்து பயந்ததாக அவரது அத்தை கூறியுள்ளார்.
பாகிஸ்தானிய தொழிலதிபர் ஷாஜதா தாவூத்தின் (Shahzada Dawood) மூத்த சகோதரி அஸ்மே தாவூத் (Azmeh Dawood), தனது இதயம் முற்றிலும் நொறுங்கிவிட்டதாக கூறியுள்ளார்.
Engro Corporation
தந்தையின் விருப்பத்திற்காக.,
ஏனெனில், சுலேமானுக்கு இந்த நீர்மூழ்கி கப்பல் பயணத்தில் விருப்பமே இல்லை என்றும், டைட்டானிக்-வெறி கொண்ட அவரது தந்தைக்கு இது முக்கியமானதாக இருந்ததால், அவர் தனது தந்தையின் விருப்பத்திற்காக மட்டுமே இந்த பயணத்தில் சேர்ந்தார் என கூறியுள்ளார்.
நடந்த அசம்பாவிதத்தையும், உயிரிழந்தவர்களையும் நினைத்தால் மூச்சு விடுவதே கடினமாக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
ஒரு மில்லியன் டொலர்கள் கொடுத்தால் கூட தான் அந்த டைட்டன் நீர்முழ்கி கப்பலில் ஏறியிருக்க மாட்டேன் என்று கூறினார்.
டைட்டானிக் கப்பலில் இருந்து 1,600 அடி (488 மீட்டர்) தொலைவில் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
PHOTO: ALAMY STOCK PHOTO
டைட்டன் நீர்முழ்கி கப்பலில் தாவூத் மற்றும் அவரது மகனுடன், பிரித்தானிய ஆய்வாளர் ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல் நிபுணர் பால்-ஹென்றி நர்ஜோலெட் மற்றும் துணை இயக்குனரான OceanGate Expeditions-ன் CEO ஸ்டாக்டன் ரஷ் ஆகியோரும் கப்பலில் இருந்தனர்.
CNN
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.