டைட்டன் நீர்மூழ்கியில் பலியான பெரும் கோடீஸ்வரர்! அனுப்பிய கடைசி மெசேஜ் என்ன?
டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என அமெரிக்க கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டைட்டானிக் கப்பல் 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி அட்லாண்டிக் கடலில் உள்ள ஐஸ் பாறை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது.
நியூயார்க் செல்லும் வழியில் கடலுக்குள் மூழ்கி மொத்தமாக அழிந்து போன இக்கப்பலில் பயணம் செய்த 1504 பேர் பலியானார்கள்.
மனித வரலாற்றில் மிக மோசமான கடல் விபத்தாக இது பார்க்கப்படுகிறது, இந்த கப்பலின் சிதிலம் அடைந்த பாகங்களை பார்க்க பலர் ஆர்வம் காட்டிவருகிறார்கள்.
(PA Media)
அந்தவகையில் இதுதொடர்பான சுற்றுலா பயணங்களை நடத்தும் நிறுவனம் தான் OceanGate.
கடந்த ஞாயிறன்று டைட்டன் என்ற நீர்மூழ்கி கப்பலில், 5 பேர் பயணித்தனர், பிரித்தானிய பணக்காரர் ஹமிஷ் ஹார்டிங், பிரித்தானிய தொழிலதிபர் ஷாஜதா தாவூத் அவரது மகன் சுலோமான் தாவூத் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஓஷன்கேட்டின் தலைமை நிர்வாகி ஸ்டாக்டன் ரஷ் இவர்களுடன் பிரான்ஸ் நீர்மூழ்கிக் கப்பல் பைலட் பால்-ஹென்றி ஆகியோர் பயணித்த நிலையில் நீர்மூழ்கி கப்பல் காணாமல் போனது.
இதனை தேடும் பணிகள் தீவிரமடைந்த போதும், பலனின்றி போனதுடன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறி இருக்கலாம் எனவும், சர்வதேச தேடல் நிறைவு பெற்றதாகவும் அமெரிக்கா கடலோர காவல் படை அதிகாரிகள் அறிவித்தனர்.
இந்நிலையில் இதில் பயணம் செய்த பணக்காரர் ஹமிஷ் ஹார்டிங், கடைசியாக அனுப்பிய மெசேஜ் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகெங்கிலும் ஆய்வு பயணங்களுக்கு பெயர் பெற்றவரான ஹார்டிங், துபாயில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
மூன்று கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரரான ஹார்டிங், கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் Natural Sciences and Chemical Engineering முடித்துள்ளார்.
Felix Kunze/Wikimedia via CC0 1.0
பூமியின் இரண்டு துருவங்களிலும் விமானம் மூலம் பயணம், கடலின் ஆழத்தில் அதிக தூரம் வரை பயணம், கடலின் ஆழத்தில் அதிக நாட்கள் செலவழித்தல் என மூன்று கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார் ஹார்டிங்.
கடைசியாக அவருடைய நண்பரும், ஓய்வுபெற்ற விண்வெளி வீரருமான கர்னல் டெர்ரி விர்ட்ஸ்-க்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.
அதில், ரிஸ்க் பற்றி எல்லாம் நான் இங்கே பேச போவது இல்லை. ஏனென்றால் இந்த கப்பல் பயணம் ரிஸ்க் நிறைந்ததுதான் என்று எல்லோருக்கும் தெரியும் என்று கூறி இருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |