பிரித்தானியாவில் அரிய உயிரியல் நிகழ்வு: இரண்டு தந்தைக்கு பிறந்த இரட்டையர்கள்: எப்படி சாத்தியம்?
பிரித்தானியாவை சேர்ந்த இரட்டையர்கள் வெவ்வேறு தந்தைகளுக்கு பிறந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இரட்டையர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பிரித்தானியாவை சேர்ந்த மிச்செல் மற்றும் லாவினியா ஆஸ்போர்ன்(Michelle and Lavinia Osbourne) என்ற இரட்டையர்கள் கடந்த 49 ஆண்டுகளாக தங்களை சாதாரண இரட்டையர்களாக கருதி வந்த நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட DNA பரிசோதனையில் இருவரும் ஒரே தாய்க்கு பிறந்து இருந்தாலும், இவர்களின் தந்தை இரண்டு வெவ்வேறு நபர்கள் என்ற அதிர்ச்சி உண்மை தெரியவந்துள்ளது.

இதன்மூலம் மிச்செல் மற்றும் லாவினியா ஆஸ்போர்ன் இருவரும் ஹெட்டோரோபேட்டர்னல் சூப்பர்ஃபெகண்டேஷன்(Heteropaternal Superfecundation) என்ற அரிய உயிரியல் நிகழ்விற்கு பிறந்த பிரித்தானியாவின் முதல் இரட்டையர்கள் என்ற அடையாளத்தை பெறுகின்றனர்.
சாதாரண இரட்டையர்கள்(Fraternal Twins) என்பவர்கள் இரண்டு வெவ்வேறு கருமுட்டைகள் இரண்டு விந்தணுக்களால் கருவுறும் போது பிறப்பவர்கள். ஆனால் மிச்செல் மற்றும் லாவினியா ஆஸ்போர்ன் போன்ற இரட்டையர்கள், இரண்டு வெவ்வேறு கருமுட்டைகள் இரண்டு வெவ்வேறு ஆண்களின் விந்தணுக்களால் கருவுறும் போது பிறப்பவர்கள்.
மிச்செல் மற்றும் லாவினியா சகோதரிகள் இந்த செய்தியை பிபிசி ரேடியோவின் The Gift நிகழ்ச்சியில் பங்கேற்ற போது தெரிவித்துள்ளனர்.
அதில், தங்களுக்கு இந்த உண்மை 2022ம் ஆண்டு தெரியவந்ததாகவும், உண்மையில் இது ஒரு அதிசயம் என்று விவரித்துள்ளனர்.
இதுவரை உலகளவில் இத்தகைய கருவுறுதல் 20-க்கும் குறைவாகவே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இரட்டையர்கள் இரண்டு தந்தைக்கு பிறப்பது எப்படி சாத்தியம்
இத்தைய அரிய உயிரியல் நிகழ்வானது சரியான நேரக் கணக்கீடு சரியாக அமைந்தால் மட்டுமே சாத்தியப்பட கூடியது.

தாய் மாதவிடாய் நேரத்தில் இரண்டு கருமுட்டைகளை வெளியிட வேண்டும். பொதுவாக விந்தணுக்கள் பெண்களின் இனப்பெருக்க உறுப்பில் 5 நாட்கள் வரை உயிர் வாழும், ஆனால் கருமுட்டையானது 12 முதல் 24 மணி நேரம் மட்டுமே உயிர் வாழும்.
அப்படியிருக்கையில் சம்பந்தப்பட்ட தாய் குறிப்பிட்ட அந்த 5 நாள் இடைவெளிக்குள் இரண்டு ஆண்களுடன் உறவு கொள்ளும் போது அவரின் ஒவ்வொரு கருமுட்டையும் இரண்டு ஆண்களின் விந்தணுக்களால் கருவுற வாய்ப்பு ஏற்படுகிறது.
இத்தகைய ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகள் குறைவாக இருந்தாலும், இத்தகைய இரட்டையர்கள் பிறப்பு அதிகமாக இருக்கலாம் என ஆய்வு முடிவுகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
சில உரிமை கோரல் நிகழ்வுகளின் போது எடுக்கப்படும் DNA பரிசோதனைகள் போதே இத்தகைய வழக்குகள் ஆவணப்படுத்தப்படுகிறது.
ஆய்வுகளின் படி, அமெரிக்காவில் பிறக்கும் 400 இரட்டையர்களில் ஒரு இரட்டையர்கள் இரண்டு வெவ்வேறு தந்தைகளுக்கு பிறப்பவர்களாக இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |