பிரியாணி சுவையான உணவு தான்! ஆனா இவர்கள் மட்டும் கிட்டயே போகக்கூடாதாம்
பலரின் வாழ்வோடு ஒன்றிவிட்ட உணவாக பிரியாணி உள்ளது. சுவைமிக்க பிரியாணியில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது.
பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
ஒரு பிளேட் பிரியாணியில் புரோட்டின்களும், கார்போஹைடிரேட்டுகளும் மற்றும் சில உடலுக்கு நன்மை தரக்கூடிய கொழுப்புகளும் இருக்கிறது.
சிக்கன் பிரியாணியாக இருந்தால் அதில் வைட்டமின் பி3 அதிகம் இருக்கும். மேலும் இதில் நியாசின் என்னும் பொருள் உள்ளது. இது உங்களுக்கு போதுமான ஆற்றலை வழங்கக்கூடியது. மேலும் நரம்பியல் கோளாறுகளான மனஅழுத்தம், அல்சைமர், நியாபக மறதி போன்ற குறைபாடுகளை சரி செய்கிறது.
உப்புமா அடிக்கடி சாப்பிடுவதால் ஏற்படும் நம்பமுடியாத அற்புதங்கள்! இதய நோய்க்கு குட் பை
பிரியாணியில் உள்ள மசாலாப்பொருட்கள் என்னவென்று பார்த்தால் இஞ்சி, மஞ்சள், மிளகு, குங்குமப்பூ, பூண்டு., இவை ஒவ்வொன்றும் தனித்தனி மருத்துவ குணங்கள் கொண்டது. இவை நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க போதுமானது. பூண்டு வாயுக்கோளாறுகளை தடுக்கும், குங்குமப்பூ கல்லீரலை பாதுகாக்கும்.
தீமைகள்
பிரியாணி எந்த அளவிற்கு ஆரோக்கியமான உணவோ அதே அளவிற்கு ஆரோக்கியத்தை கெடுக்கவும் கூடியது. எல்லாம் நாம் சாப்பிடும் அளவை பொறுத்துதான் இருக்கிறது. தினமும் பிரியாணி சாப்பிடுவது பல ஆரோக்கிய சீர்கேடுகளை உண்டாக்கும்.
நல்ல கொழுக்களை போல சில தீய கொழுப்புகளும் பிரியாணியில் இருக்கத்தான் செய்கிறது. ஆகவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை, இதய நோய் பிரச்சனை உள்ளவர்கள் பிரியாணியை தவிர்ப்பது நல்லது.