பிரித்தானியாவில் நள்ளிரவில் நடந்த கத்தி குத்து: இளம் கால்பந்து வீரருக்கு நேர்ந்த பயங்கரம்
பிரித்தானியாவின் பர்மிங்காமில் இரவு விடுதியில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில் கால்பந்து வீரர் கோடி ஃபிஷர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கால்பந்து வீரருக்கு கத்தி குத்து
பர்மிங்காமின் டிக்பெத்தில் உள்ள தி கிரேன் இரவு விடுதியில் நடன தளத்தில் 23 வயது இளைஞன் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குத்துச்சண்டை தினத்தன்று இரவு 11.45 மணிக்கு நடந்த இந்த கத்தி குத்து சம்பவத்தை தொடர்ந்து தி கிரேன் இரவு விடுதிக்கு வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கத்தியால் குத்தப்பட்ட இளைஞர் கால்பந்து வீரர் என்றும், அவரது பெயர் கோடி ஃபிஷர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
#UPDATE | We can now name the young man who died as Cody Fisher.
— Birmingham Police (@BrumPolice) December 27, 2022
His family said tonight: "They have broken our hearts; I have lost my best friend. My family and I are asking for privacy and respectfulness at this heart-breaking time." pic.twitter.com/xErz4SvBJ6
இவர் சதர்ன் லீக் பிரிமியர் பிரிவு சென்ட்ரலில் இருக்கும் ஸ்ட்ராட் ஃபோர்ட் டவுன் எஃப் சி-க்கும் (Stratford Town FC) ப்ரோம்ஸ்கிரோவ் ஸ்போர்ட்டிங்கிற்காகவும் (Bromsgrove Sporting) விளையாடியுள்ளார்.
கோடி ஃபிஷர் தனது நண்பர்களுடன் இரவு வெளியே சென்று கொண்டிருந்த போது, மர்ம கும்பல் ஒன்று அவரை அணுகி கத்தியால் குத்தி இருப்பதாகவும், அவரை காப்பாற்ற கடுமையாக முயற்சி செய்தும் அரை மணி நேரத்திற்கு பிறகு கோடி ஃபிஷர் இறந்துவிட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கொலை விசாரணை
கால்பந்து வீரர் கோடி ஃபிஷர் மர்ம குழுவால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அத்துடன் கொலை குறித்து துப்பறியும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்து சிசிடிவியை ஆய்வு செய்து வருகின்றனர்.
(Instagram)
மேலும் கத்திக்குத்துச் சம்பவத்தின் போது இரவு விடுதியில் நூற்றுக்கணக்கானோர் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி
கால்பந்து வீரர் கோடி ஃபிஷர் கொலை செய்யப்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து அவரது குடும்பம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “எங்கள் இதயத்தை உடைத்து விட்டனர்” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் நாங்கள் எங்களது சிறந்த நண்பனை இழந்து விட்டோம் என்று அவரது நண்பர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
(Darren Quinton/Birmingham Live)
ஸ்கை நியூஸிடம் ஸ்ட்ராட்ஃபோர்ட் டவுன் தலைவர், ஜெட் மெக்ரோரி பேசிய போது “எல்லோரும் இந்தச் செய்தியால் பேரழிவிற்கு ஆளாகியுள்ளனர்" என்றும், கோடி ஃபிஷர் "திறமையான கால்பந்து வீரர்" மற்றும் அழகிய இளைஞன் என்றும் விவரித்தார்.