பிரித்தானியாவில் இரவில் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய வானம்: காரணம் என்ன தெரியுமா?
பிரித்தானியாவின் பர்மிங்காம் பகுதியில் வானம் திடீரென இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய வினோதமான காட்சி பொதுமக்களை ஆச்சரியத்தில் தள்ளியுள்ளது.
இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய வானம்
வியாழக்கிழமை மாலை மேற்கு மிட்லாண்ட்ஸ் பகுதி மக்களுக்கு ஆச்சரியம் மற்றும் வியப்பூட்டும் விதமாக வானம் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியது. இதனை புகைப்படம் எடுத்து பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.
சிலர் இதனை ரம்மியமான சூரிய அஸ்தமனம் என்றும், சிலர் இதனை நார்தன் லைட்ஸ்(Northern Lights) என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Pink sky at night, Blues delight. 🩷 pic.twitter.com/OA8Ywbnreo
— Birmingham City FC (@BCFC) January 9, 2026
வானம் இளஞ்சிவப்பாக மாற என்ன காரணம்
இந்நிலையில் வானம் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியதற்கான காரணத்தைப் பர்மிங்காம் நகர கால்பந்து கிளப் (Birmingham City Football Club) தன்னுடைய X தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில், புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, செயின்ட் ஆண்ட்ரூஸ் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள LED விளக்குகளே வானம் இளஞ்சிவப்பு நிறத்தில் மாற காரணம் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் புகைப்பட குறிப்பில், இரவில் இளஞ்சிவப்பு வானம், நீலம் மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டுள்ளது.
BBC வானிலை ஆய்வாளர் சைமன் கிங் வழங்கிய விளக்கத்தில், வானில் உள்ள மேகங்கள் மற்றும் பனிப்பொழிவு LED விளக்குகளின் ஒளியை சுலபமாக பிரதிபலித்து இந்த பிங்க் வானத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |