சாலையில் பிறந்தநாள் கொண்டாட்டம்! வழி விடுங்கன்னு கேட்ட ஆட்டோ டிரைவர் கொலை
நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருந்த கும்பலிடம் இருந்து, வழிவிடுங்கள் என்று கேட்ட ஆட்டோ ஓட்டுநரை வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்தியா: தமிழ்நாடு மாநிலம் சென்னையில் உள்ள அம்பத்தூரைச் சேர்ந்தவர் ஆட்டோ ட்ரைவர் காமேஷ். இவருக்கு வயது 25. இவர், தனது பணியை முடித்துவிட்டு ஒரகடம் ஐய்யப்பன் தெரு வழியாக சென்றுள்ளார். அங்கு, ஒரு கும்பல் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி கொண்டிருந்தனர்.
அதாவது, அதே பகுதியைச் சேர்ந்த கௌதம், நண்பர்கள் உள்பட தனது பிறந்தநாளை நடுரோட்டில் கொண்டாடினார்.
ஆட்டோ ஓட்டுநர் வெட்டி படுகொலை
அப்போது, அவ்வழியாக சென்ற ஆட்டோ ஓட்டுநர் காமேஷ் வழிவிடுமாறு கேட்டுள்ளார். ஆனால், அந்த கும்பல் மறுத்துள்ளனர். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பு வந்தது.
இதில், ஆட்டோ ஓட்டுநர் காமேஷை கௌதம் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ஆத்திரத்தில் வெட்டி கொலை செய்துள்ளனர். காமேஷின் அலறல் சத்தம் கேட்டு பார்க்க வந்த அவரது சகோதரர் சதீஷையும் வெட்டினர்.
பொலிசார் விசாரணை
இச்சம்பவத்தையடுத்து, அங்குள்ள பொதுமக்கள் அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
பின், சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் படுகாயமடைந்த சதீஸை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். உயிரிழந்த காமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து, பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். காமேஷை வெட்டிக் கொன்று தப்பியோடிய கௌதம் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட10 பேரை பொலிசார் தேடி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |