குதிக்கும் Bitcoin விலை... ஒரே நாளில் புதிய உச்சம்
கிரிப்டோ நாணயமான பிட்காயின் (Bitcoin) முதன்முறையாக 97,000 டொலரை கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
குதிக்கும் பிட்காயின்
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவாகியுள்ளதை அடுத்து கிரிப்டோ சந்தை அதிரடி ஏற்றம் கண்டுள்ளது.
ட்ரம்ப் மற்றும் எலோன் மஸ்க் கூட்டணி கிரிப்டோவுக்கு ஆதரவாளர்கள் என்பதால், தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றிமுகம் என்ற தகவல் வெளியானதும், கிரிப்டோ நாணயமான பிட்காயின் விலை குதிக்கத் தொடங்கியது.
ட்ரம்ப் மட்டுமின்றி, கிரிப்டோ சந்தையை ஆதரிக்கும் பிரதிநிதிகள் பலர் இந்தமுறை தெரிவாகியுள்ளனர். இதனால் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத உத்வேகம் கிரிப்டோ சந்தையில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிய உச்சமாக பிட்காயின் விலை 97,000 டொலரை கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. மேலும் அடுத்த சில தினங்களில் பிட்காயின் விலை 100,000 டொலர் என வரலாறு படைக்கும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.
நண்பர் கட்டாயப்படுத்தியதால் ரூ 50,000 முதலீடு செய்த நபர்.... இன்று அவரது சொத்து மதிப்பு ரூ 18,480 கோடி
இதனிடையே, டிஜிட்டல் சொத்துக் கொள்கை தொடர்பில் வெள்ளை மாளிகை பதவியை உருவாக்கலாமா என்ற ஆலோசனையில் டொனால்டு ட்ரம்பின் அணி ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிட்காயின் 100,000 டொலர்
இதுவும் பிட்காயின் உட்பட கிரிப்டோ சந்தையில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது,. ஆனால் சில வணிக நிபுணர்கள், பிட்காயின் 100,000 டொலர்கள் தொட வாய்ப்பில்லை என்றும் கூறி வருகின்றனர்.
கடந்த 6 நாட்களில் மட்டும் அதிகமானோர் பிட்காயின் வாங்கியதும் இந்த விலை ஏற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, பிட்காயின்களை அதிக எண்ணிக்கையில் கைவசம் வைத்துள்ள MicroStrategy நிறுவனம் தெரிவிக்கையில்,
2.6 பில்லியன் டொலர் தொகையை பிட்காயின் வாங்கும் பொருட்டு ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதுவரை வெளியான தரவுகளின் அடிப்படையில் MicroStrategy நிறுவனம் 31 பில்லியன் டொலர் அளவுக்கு பிட்காயின் உட்பட கிரிப்டோ நாணயங்களில் முதலீடு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
தற்போது ஒரு பிட்காயின் விலை 97,519 டொலர் என விற்பனையாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |