ஒரேயடியாக 6 பில்லியன் டொலர் தொகையை இழந்த பிட்காயின் முதலீட்டாளர்
கிரிப்டோகரன்சியின் மதிப்பில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சியால், உலகின் பணக்கார பிட்காயின் வர்த்தகர் ஒருவர் இரண்டு மாதங்களுக்குள் 6 பில்லியன் டொலர் இழந்துள்ளார்.
பிட்காயினின் மதிப்பானது 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது - மேலும் மேலும் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவே நிபுணர்கள் தரப்பு கூறுகின்றனர்.
உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி என அறியப்படும் பிட்காயினின் மதிப்பானது தற்போது 21,677 USD என தெரிய வந்துள்ளது. கடந்த 2021 நவம்பர் மாதம் 70,000 டொலர் என உச்சத்தில் இருந்த நிலையில், படிப்படியாக சரிவடைந்து வந்துள்ளது.
இதனிடையே, இந்த ஆண்டு ஏப்ரல் மாத தொடக்கத்தில் கிரிப்டோகரன்சியில் அதுவரை 11.5 பில்லியன் டொலர் அளவுக்கு முதலீடு செய்திருந்தார் பெயர் வெளிப்படுத்தாத அந்த பணக்கார பிட்காயின் வர்த்தகர்.
தற்போது அவரது கிரிப்டோகரன்சியின் மதிப்பு 5.24 பில்லியன் டொலர் அளவுக்கு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மட்டுமின்றி, இந்த மர்ம பிட்காயின் வர்த்தகர் 19 பில்லியன் டொலர் தொகை அளவுக்கு முன்பு பிட்காயினில் மட்டும் முதலீடு செய்திருந்துள்ளார்.
பிட்காயின் மதிப்பு சரிவடைய அதன் தாக்கம் Ethereum உள்ளிட்ட காயின்களிலும் வெளிப்படுவதுண்டு. இந்த வார தொடக்கத்தில் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் என அறியப்படும் பைனான்ஸ், அனைத்து பிட்காயின் வர்த்தகத்தையும் பல மணிநேரங்களுக்கு நிறுத்தியது, இது முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
இதேப்போன்று பிரபலமான Celsius நிறுவனமும் முன்னெடுத்த நடவடிக்கை வாடிக்கையாளர்களுக்கு பீதியை ஏற்படுத்தியது. இறுதியாக, மத்திய வங்கி வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதால் கிரிப்டோகரன்சி மீதான நாட்டத்தை குறைக்கும் என்றே நம்பப்படுகிறது.