ரூ.500 கோடி பிட்காயின் பண மோசடி: பிரித்தானியாவில் தலைமறைவாக இருந்த பெண்: சிறை தண்டனை
பிட்காயின் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிட்காயின் பண மோசடி
பிரித்தானிய வரலாற்றிலேயே மிகப்பெரிய பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 47 வயதான ஜிமின் கியானுக்கு (zhimin Qian) 11 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

செளத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் ஜிமின் கியான் தன்மீதான இரண்டு பண மோசடி குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். ஜிமின் கியான் கிட்டத்தட்ட 5 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான பிட்காயின் மோசடியில் ஈடுபட்டு 5 ஆண்டுகளாக(2018 ஆண்டு முதல்) தலைமறைவாக இருந்து வந்தார்.
அவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் திகதி யார்க் புறநகரில் உள்ள Airbnb வீட்டில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
2018ம் ஆண்டு லண்டன் ஹேம்ப்ஸ்டெட் ஹீத்துக்கு அருகிலுள்ள 5 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான வீட்டில் ஜிமின் கியான் வாடகைக்கு தங்கியிருந்த போது நடத்தப்பட்ட சோதனையின் போது கிட்டத்தட்ட 61,000 பிட்காயின்களை அதிகாரிகள் கைப்பற்றி இருந்தனர்.

இது பிரித்தானியாவில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய கிரிப்டோ கரன்சி பறிமுதல் ஆகும்.
சீனாவிலிருந்து தப்பி வந்த பெண்
பிரித்தானியாவில் மோசடி செயல்கள் தொடர்பில் பிடிபடுவதற்கு முன்னதாக, ஜிமின் கியான் சீனாவில் மிகப்பெரிய மோசடி செயலில் ஈடுபட்ட பிறகு அங்கிருந்து தப்பி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் நாட்டின் போலி பாஸ்போர்ட்களை பயன்படுத்தி யாடி ஜாங்(yadi Zhang) என்ற புனைப்பெயரில் ஜிமின் கியான் 2017ம் ஆண்டு பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக நுழைந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |