புதிய உச்சத்தை எட்டிய Bitcoin: Crypto Week-ஐ முன்னிட்டு 150,000 டொலரை அடைய வாய்ப்பு
பிட்காயின் (Bitcoin) மதிப்பு வரலாற்றில் முதல் முறையாக 119,000 டொலரை கடந்துள்ளது. தற்போது 118,780 டொலர் நிலவரத்தில் இருக்கிறது.
உலக சந்தை அதிர்ச்சியில் உள்ளபோதும், கிரிப்டோ சந்தை எதிர்பாராத விதமாக வலுப்பெற்றுள்ளது.
இந்த அதிர்வுக்கு முக்கிய காரணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்பிய வரி கடிதங்கள், அதனால் ஏற்பட்ட வணிக மோதல், மற்றும் வரும் வாரத்தில் நடைபெறவுள்ள ‘Crypto Week’ என்பது கருதப்படுகிறது.
ஏன் பிட்காயின் மதிப்பு இவ்வளவு ஏறியது?
அமெரிக்க நாடாளுமன்றம் இவ்வாரம் மூன்று முக்கிய கிரிப்டோ விதிமுறைகள் தொடர்பான மசோதைகளை பரிசீலிக்க உள்ளது:
- GENIUS Act – தனியார் நிறுவனங்கள் ஸ்டேபிள்காயின்களை வெளியிட அனுமதிக்கிறது.
- Digital Asset Market Clarity Act – கிரிப்டோ சந்தைக்கு சட்ட கட்டுப்பாடு தருகிறது.
- CBDC Anti-Surveillance State Act – மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்திற்கு தடையாக அமையும்.
இந்த சட்டங்கள் அமெரிக்க கிரிப்டோ மார்க்கெட்டில் நம்பிக்கை மற்றும் முதலீட்டை மீண்டும் கொண்டுவரும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி
எதிர்காலம் எப்படி?
Bitfinex நிறுவனத்தின் ஜாக் கூனர் கூறுகையில், “சட்டப்பூர்வ ஒழுங்குமுறையை நோக்கி நகரும் இயக்கங்கள் சந்தைக்கு நல்ல சைகை,” என்கிறார்.
அதிகம் ஆப்ஷன் ட்ரேடர்களும் பிட்காயின் $150,000-ஐ எட்டும் என கணிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Bitcoin all-time high 2025, Crypto Week legislation USA, Trump crypto policy 2025, Bitcoin price prediction $150k, GENIUS Act cryptocurrency USA, Crypto Week legislation, GENIUS Act Trump, Cryptocurrency market rally, Bitcoin price prediction