தங்கம் நல்ல நீண்ட கால முதலீடு., ஆனால் பிட்காயின் அதைவிட சிறப்பாக... BCA ஆய்வு
முதலீட்டில் தங்கத்தை விட பிட்காயின் சிறப்பாக செயல்படும் என புதிய ஆய்வு கூறுகிறது.
BCA Research வெளியிட்ட புதிய அறிக்கையில், தங்கம் மற்றும் பிட்காயின் ஆகியவை நீண்ட காலத்தில் வலுவான முதலீடுகளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பிட்காயின் (Bitcoin) என்பது “digital insurance asset” என வரையறுக்கப்பட்டு, தங்கத்தை விட அதிக வளர்ச்சி வாய்ப்பு கொண்டதாக BCA நிபுணர்கள் கூறுகின்றனர்.
தங்கத்தின் மதிப்பு, பொது நம்பிக்கை மற்றும் மத்திய வங்கிகளின் நடத்தை மூலம் உருவாகிறது. இது பணவியல் முறைமையின் பாதுகாப்பு கருவியாக செயல்படுகிறது.

BCA ஆய்வில், தங்கத்தின் நீண்ட கால மதிப்பை நிர்ணயிக்கும் 3 முக்கிய காரணிகள்: உலகளாவிய செல்வ நிலை, இன்சூரன்ஸ் ஆஸ்செட்டுகளுக்கான ஒதுக்கீடு, மற்றும் மாற்று வாய்ப்புகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மூன்றாவது காரணியாக பிட்காயின் தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது.
பிட்காயின், “டிஜிட்டல் தங்கம்” என அழைக்கப்படுவதால், அதற்கும் தங்கத்திற்கும் ஒரே மாதிரியான நெட்வொர்க் விளைவு உள்ளது.
ஆனால், பிட்காயின் சந்தை மதிப்பு 2 டிரில்லியன் டொலர் மட்டுமே, தங்கம் 30 டிரில்லியன் டொலராக இருக்கிறது. எனவே, பிட்காயினுக்கு நீண்ட காலத்தில் அதிக வளர்ச்சி வாய்ப்பு உள்ளது.
BCA, “நீண்ட கால முதலீட்டாளர்கள் பிட்காயினையும் தங்களது போர்ட்ஃபோலியோவில் சேர்க்க வேண்டும்” என பரிந்துரை செய்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Bitcoin vs gold investment 2025, BCA Research Bitcoin forecast, digital gold vs physical gold, long-term crypto investment, Bitcoin insurance asset value, gold market trends 2025, Bitcoin market cap vs gold, fiat currency hedge assets, network effect Bitcoin gold, crypto vs commodity returns