தொடர்ந்து 12-வது மாதமாக தங்கம் சேமிப்பை அதிகரிக்கும் சீனா
சீனாவின் மத்திய வங்கி (People’s Bank of China - PBOC), 2025 அக்டோபர் மாதத்திலும் தங்கம் வாங்கியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்ந்து 12-வது மாதமாக தங்கம் சேமிப்பை அதிகரிக்கும் நடவடிக்கையாகும்.
அக்டோபர் மாத இறுதியில் சீனாவின் தங்க கையிருப்பு 74.09 மில்லியன் அவுன்ஸாக உயர்ந்துள்ளது. இது கடந்த மாதம் 74.06 மில்லியனாக இருந்தது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் 72.8 மில்லியன் அவுன்ஸ் இருந்த நிலையில், வருடாந்திர அடிப்படையில் 1.8 சதவீதம் உயர்வு காணப்பட்டுள்ளது.

சீன மத்திய வங்கியிடம் உள்ள தங்கத்தின் மொத்த மதிப்பு 297.21 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது, இது செப்டம்பர் மாதத்தில் 283.29 பில்லியன் டொலராக இருந்தது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸுக்கு 4,000 டொலர் மேல் விற்பனையாகி வருகிறது.
அமெரிக்க டொலரின் மதிப்பு குறைவடைந்ததாலும், டிசம்பர் மாதத்தில் அமெரிக்கா வட்டி விகிதத்தை குறைக்கும் எதிர்பார்ப்பாலும் தங்கம் மீண்டும் பாதுகாப்பான முதலீடாக மாறியுள்ளது.
2024 மே மாதத்தில் PBOC தங்கம் வாங்குவதை நிறுத்தியிருந்தாலும், அதே ஆண்டு நவம்பரில் மீண்டும் தங்கம் சேமிப்பை தொடங்கியது. தற்போது, சீனாவின் உள்நாட்டு தங்க உற்பத்தி தரவுகள் வெளியிடப்படாத நிலையில், சந்தை ஆய்வாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த நிலைமை, உலகளாவிய பொருளாதார சிக்கல்கள் மற்றும் நாணய மாற்ற விகிதங்களில் ஏற்பட்ட மாற்றங்களை பிரதிபலிக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
China gold reserves 2025, PBOC gold purchase October, China central bank gold buying, gold price surge China demand, gold investment China 2025, global gold market trends, safe haven assets 2025, US dollar decline gold impact, central bank gold accumulation, China gold holdings update