உடல் முழுக்க பச்சைக்குத்திய வினோத நபர்! தெருக்களில் இருந்து சிகரெட் துண்டுகளை எடுக்கும் காகங்கள்... வினோத உலகம்
ஜெர்மனியை சேர்ந்த நபர் ஒருவர் தனது உடலில் குண்டூசி அளவு கூட இடம் இல்லாத அளவுக்கு பச்சைக் குத்தி 453 துளைகளையிட்டு அதில் ஆபரணங்களை பொருத்தி கொண்டு வலம் வரும் வினோத சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
பொதுவாக ஏராளமான சமையல் ஆர்வலர்கள் மேகி நூடுல்சை பாலுடன் சேர்த்து சமைத்து, இது ’மேகி மில்க் ஷேக்’ என்ற பெயரில் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இது எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் விதமாக, தெருவோர வியாபாரி ஒருவரால் உருவாக்கப்பட்ட புதிய வினோதமான உணவு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
ஸ்வீடனில் உள்ள கோர்விட் க்ளீனிங் (Corvid Cleaning) என்கிற நிறுவனம், வெகுமதி அடிப்படையிலான அமைப்பின் மூலம், சிகரெட் துண்டுகளை சேகரிக்க காகங்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தங்களிலே வைரலாகி வருகின்றது.
இதுகுறித்து மேலதிக தகவல்களை கீழ் காணும் வீடியோவில் பார்க்கவும்.