அனைவரும் யோகாசனம் செய்து உடலையும், உள்ளத்தையும் மேம்படுத்துவோம்- அண்ணாமலை
2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில், உலகில் உள்ள 191 நாடுகளில் 11வது சா்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று யோகா தின பயிற்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
இந்நிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வெளியிட்ட பதிவு..,
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்றைய தினம் எனது இல்லத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டதில் மகிழ்ச்சி.
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் முயற்சியால், கடந்த 2014 ஆம் ஆண்டு ஐநா சபை, நமது பாரத நாட்டின் அடையாளங்களில் ஒன்றான யோகாசனத்தை அங்கீகரித்து, ஆண்டுதோறும் ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்றைய தினம் எனது இல்லத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டதில் மகிழ்ச்சி.
— K.Annamalai (@annamalai_k) June 21, 2025
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் முயற்சியால், கடந்த 2014 ஆம் ஆண்டு ஐநா சபை, நமது பாரத நாட்டின் அடையாளங்களில் ஒன்றான யோகாசனத்தை அங்கீகரித்து, ஆண்டுதோறும்… pic.twitter.com/Js0XcDEXkl
யோகா பயிற்சிகள், உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மன ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் நல்வாழ்வை மேம்படுத்துவதை , உலக நாடுகள் உணர்ந்து வருகின்றன. உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளில், மக்கள் பலரும் யோகாவை தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர்.
யோகா பயிற்சி செய்வது வழக்கமான உடற்பயிற்சியைத் தாண்டி, உடல் மற்றும் மன நல்வாழ்வை மேம்படுத்துவதோடு, சுவாசத்தை சீரமைப்பது, மன அழுத்தத்தைக் குறைப்பது என, அன்றாட வாழ்வை மேம்படுத்துகிறது.
அனைவரும் யோகாசனம் செய்வோம். நமது உடலையும், உள்ளத்தையும் மேம்படுத்துவோம் என்று அதில் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |