பெண்ணின் தலைமுடியை வெட்டி நூதன தண்டனை.., மம்தாவுக்கு பாஜக கண்டனம்
மேற்கு வங்கத்தில் கூந்தலை வெட்டி பெண்ணுக்கு தண்டனை அளிக்கப்பட்ட விவகாரத்திற்கு ஆளும் திரிணமூல் கட்சிக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
பெண்ணுக்கு தண்டனை
இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் பெண் ஒருவரின் தலைமுடியை ஆண் ஒருவர் கத்தரிக்கோலால் வெட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த வீடியோவை பாஜக மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் தனது பதிவில், "இந்த சம்பவம் டோம்ஜூரில் நடந்துள்ளது. அது ஒன்றும் தொலைதூரம் அல்ல. ஹவுரா நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதி தான்.
இந்த செயலை செய்த இஷாலஷ்கர், அப்துல் ஹுசைன் லஷ்கர் ஆகியோர் ஆளும் கட்சியான திரிணமூல் கட்சியுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.
இந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. மேலும் அங்கு கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது" என்று கூறியுள்ளார்.
அதோடு, பாஜக ஐ.டி. பிரிவின் தலைவர்அமித் மாளவியாவும் இந்த வீடியோவை பகிர்ந்து, "மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது வாக்கு வங்கியை பாதுகாக்க அம்மாநிலத்தை பழமைவாத பாதையில் பின்னோக்கி தள்ளியுள்ளார்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |