அரசு அதிகாரியை காலால் எட்டி உதைத்த பாஜக தலைவர் கைது: வைரலாகும் வீடியோ
அரசு அதிகாரியை காலால் எட்டி உதைத்து தாக்குதல் நடத்திய ஒடிசா பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வைரலாகும் வீடியோ
இந்திய மாநிலமான, ஒடிசா நிர்வாக சேவை (ஓ.ஏ.எஸ்) அதிகாரி ரத்னாகர் சாஹூ. இவரை தாக்கிய வழக்கில் பாஜக தலைவர் ஜெகந்நாத் பிரதான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில், பிரதான் காவல்துறையிடம் சரண் அடைந்தார். ரத்னாகர் சாஹூவை அலுவலகத்தில் இருந்து ஜெகந்நாத் பிரதானின் ஆட்கள் இழுத்துச் சென்று தாக்கி, காலால் எட்டி உதைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு அதிகாரியை தாக்குதல் நடத்தியதால் மாநிலம் முழுவதும் உள்ள ஓ.ஏ.எஸ் அதிகாரிகள் கூட்டு விடுப்பு எடுத்திருந்தனர்.
ଭାରି ପରିବାର ଆମ ସରକାର, ରାଜଧାନୀ ରାସ୍ତାରେ ଗୁଣ୍ଡାରାଜ !
— Naimisha (ନୈମିଷା) 🇮🇳 (@SpeakNaimisha) July 1, 2025
Shocking! Goondaraj ! A senior OAS officer who is the additional commissioner of @bmcbbsr was assaulted in broad daylight outside of his office.
If an officer isn’t safe inside his own office, then what about public? People… pic.twitter.com/cDZclf5djf
இதையடுத்து, ஒடிசா பாஜக தலைவர் பிரதான் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து விடுப்பை வாபஸ் பெற்றுக் கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பிரதான் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |