தியாகி மாதிரி வேஷம்.. இதுல என்ன பெருமை: நடிகை கஸ்தூரிக்கு பதிலடி கொடுத்த ஷர்மிளா
பாஜக எம்.எல்.ஏ தனது சொந்த வீட்டை இடித்தது குறித்து நடிகை கஸ்தூரிக்கும், டாக்டர் ஷர்மிளாவுக்கும் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கருத்து மோதல் நடைபெற்று வருகிறது.
சொந்த வீட்டை இடித்த பாஜக எம்.எல்.ஏ
தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கமா ரெட்டி தொகுதியில் பாஜக வேட்பாளரான கேவி ரமணரெட்டி வெற்றி பெற்றார்.
இந்நிலையில், கமாரெட்டி பேரூராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் சாலை விரிவாக்க திட்டத்திற்காக வட்லூர் சாலையில் உள்ள தனது சொந்த வீட்டை கேவி ரமணரெட்டி இடித்தார். சாலை அமைக்க எம்.எல்.ஏ- வின் வீடு ஆக்கிரமித்து இருந்ததால் இடிக்கப்பட்டது. இந்த செயல் பெரிதும் பேசப்பட்டது.
கஸ்தூரி & ஷர்மிளா மோதல்
இந்த சம்பவத்திற்கு நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர், "நம்புகிறீர்களோ, இல்லையோ! தெலுங்கானா பாஜக எம்எல்ஏ கேவி ரமணா ரெட்டி சாலை அமைக்க தனது சொந்த வீட்டை இடித்துள்ளார். என்ன மனிதன்! ரேவந்த் ரெட்டி மற்றும் கே.சி.ஆர் இருவரையும் அவர் சட்டசபை தேர்தலில் வென்றதில் ஆச்சரியமில்லை" என்று கூறியிருந்தார்.
இவரின் கருத்துக்கு பதிலளித்த டாக்டர் ஷர்மிளா, "ஆக்கிரமித்து கட்டிய வீட்டை இடிச்சிருக்காங்க…இதுல என்ன பெருமை ? அரசு இடிச்சா அசிங்கம்னு முந்திகிட்டு.. ஏதோ தியாகி மாதிரி வேஷம் போட வேண்டியது, இதுக்கு What a man" என்று கூறியிருந்தார்.
இந்த கருத்தை பார்த்த நடிகை கஸ்தூரி அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, "பட்டா மோசடி எல்லோருக்கும் கைவருமா? நிலத்தை அபகரித்து ஏரியை ஆக்ரமித்து ஆஸ்பத்திரி, கல்லூரி, பள்ளி, ஹோட்டல் என்று கட்டி சட்டம் நெருங்கினால் வயசாயிடிச்சு, நெஞ்சுவலி என்று சொல்லும் திருடர்களுக்கு வலிய சென்று விதிமீறலை திருத்திக்கொள்வதெல்லாம் புரியாது" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |