ரூ.110 கோடியை நன்கொடையாக அள்ளிக்கொடுத்த முன்னாள் மாணவர்.., சென்னை ஐஐடியில் நெகிழ்ச்சி
தான் கல்வி பயின்ற கல்வி நிறுவனத்துக்கு ரூ.110 கோடியை நன்கொடையாக முன்னாள் மாணவரான பிரபல தொழிலதிபர் வழங்கியுள்ளார்.
செலவை ஏற்பதாக உறுதி
சென்னையில் உள்ள பிரபல கல்வி நிறுவனமான ஐஐடியில் படித்த முன்னாள் மாணவரான சுநீல் வாத்வானி தற்போது பிரபல தொழிலதிபராக உள்ளார். இவர், ஐ-கேட் மற்றும் மாஸ்டெக் டிஜிட்டல் நிறுவனங்களின் இணை நிறுவனராக உள்ளார்.
இந்நிலையில், சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் உள்ள தரவு அறிவியல் (Data Science) மற்றும் செய்யறிவு தொழில்நுட்பம் (Artificial Intelligence) சார்ந்த பாடப்பிரிவுகளுக்கு ரூ. 110 கோடி மதிப்பீட்டில் கல்வி வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரயிலில் Lower Berth இவங்களுக்கு மட்டும் தான்.., Middle berth -ல் உள்ளவர்கள் எப்போது தூங்க முடியும்? புதிய அறிவிப்பு
இதற்கான முழு செலவையும் தான் ஏற்றுக்கொள்வதாக அங்கு படித்த சுநீல் வாத்வானி (Sunil Wadhwani) உறுதியளித்தார்.
ஒப்பந்தம்
இதனைத்தொடர்ந்து, ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில், ஐஐடி இயக்குநர் பேராசிரியர் V. Kamakoti மற்றும் Sunil Wadhwani இடையே நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும், புதியதாக அமையவுள்ள கல்வி வளாகத்திற்கு வாத்வானி ஸ்கூல் ஆஃப் டேட்டா சயின்ஸ் மற்றும் ஏஐ என்ற பெயரும் வைக்கப்படவுள்ளது.
இதுகுறித்து பேசிய Sunil Wadhwani, "உலகிலுள்ள முன்னணி செய்யறிவு தொழில்நுட்பம் சார்ந்த கல்வி வளாகங்களுள் முக்கியமான ஒன்றாக இந்த கல்வி மையம் செயல்படும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |