ரயிலில் Lower Berth இவங்களுக்கு மட்டும் தான்.., Middle berth -ல் உள்ளவர்கள் எப்போது தூங்க முடியும்? புதிய அறிவிப்பு
ரயிலில் இனிமேல் லோயர் பர்த் ஒதுக்கீட்டில் இவர்களுக்கு முன்னிரிமை அளிக்கப்படும் என்று இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதிய விதிமுறைகள்
ரயிலில் Lower Berth ஒதுக்குவதில் இனி விதிமுறைகள் கடைபிடிக்கப்படும் என்று இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, Lower Berth -ல் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், Lower Berth -ல் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் இருக்கும் போது Middle Birth -ல் உள்ளவர்கள் 10 மணிக்கு பின் தான் தூங்க செல்ல வேண்டும். அதுவரைக்கும் Lower Berth -ல் உள்ளவருடன் அமர வேண்டும். 10 மணிக்கு முன்னர் Middle berth -ல் உள்ளவர்கள் தூங்க முடியாது.
ஆனால், Lower Berth -ல் உள்ளவர்கள் தூங்க அனுமதித்தால் தாராளமாக தூங்கிக் கொள்ளலாம். இல்லையென்றால் 10 மணி வரை காத்திருக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனிடையே, Upper Berth -ல் உள்ளவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் கிடையாது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தூங்கிக் கொள்ளலாம். அதே போல 10 மணிக்கு மேலே லைட்டை எரியவிடக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. ரயில்வேயின் இந்த அறிவிப்பை பலரும் வரவேற்றுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |