கட்சியில் இணைந்த காங்கிரஸ் கவுன்சிலர்களை சுத்தப்படுத்த பசுவின் சிறுநீரை தெளித்த பாஜக எம்.எல்.ஏ
பாஜகவில் இணைந்த 7 காங்கிரஸ் கவுன்சிலர்கள், ஒரு சுயேச்சை கவுன்சிலர் என 8 பேரை சுத்தப்படுத்துவதாக கூறி அவர்கள் மீது பசுவின் சிறுநீரை கங்கை நீரில் கலந்து பாஜக எம்.எல்.ஏ தெளித்துள்ளார்.
பசுவின் சிறுநீரை தெளித்த பாஜக எம்.எல்.ஏ
இந்திய மாநிலமான ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு, பஜன்லால் சர்மா முதலமைச்சராக உள்ளார்.
தலைநகர் ஜெய்ப்பூர் மாநகராட்சியின் ஹெரிடேஜ் மேயராக பாஜகவின் முனிஷ் குர்ஜார் என்பவர் பொறுப்பு வகித்து வந்தார்.
இவர் மீது ஊழல் புகார்கள் வந்ததும் மேயர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், புதிய மேயராக பாஜகவின் குசும் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
இவருக்கு பாஜக கவுன்சிலர்கள் உள்பட 7 காங்கிரஸ் கவுன்சிலர்கள், ஒரு சுயேச்சை கவுன்சிலர்கள் என 8 பேர் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து, புதிய மேயராக குசும் யாதவ் பதவியேற்ற நிலையில் அவர்கள் 8 பேரும் பாஜகவில் இணைந்தனர்.
இந்நிலையில், ஜெய்ப்பூரின் ஹவா மஹால் சட்டமன்ற தொகுதியில் பாஜக எம்.எல்.ஏவாக இருக்கும் பாலமுகுந்த் ஆச்சாரியா என்பவர், பாஜகவின் இணைந்த காங்கிரஸ் கவுன்சிலர்களை சுத்தப்படுத்துவதற்காக அவர்கள் மீது கங்கை புனித நீருடன் கலக்கப்பட்ட பசுவின் சிறுநீரை கலந்து தெளித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், ஜெய்ப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் நடந்துள்ளதாக கூறி அலுவலகத்திலும் சிறுநீர் கலந்த கங்கை நீரை தெளித்துள்ளார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாலமுகுந்த் ஆச்சாரியா கூறுகையில், "நாங்கள் கங்கை நீரால் சுத்தப்படுத்திவிட்டோம். . வேதமந்திர பிரார்த்தனைக்கு பிறகு நவமி திகதியில் புதிய மேயர் பொறுப்பேற்றுள்ளார். இனி தூய்மையான சூழல் நிலவும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |