மூவர்ண கொடியை வைத்து முகம் துடைத்த பாஜக எம்.எல்.ஏ.., சர்ச்சையாகும் வீடியோ
மூவர்ண கொடியை வைத்து பாஜக எம்.எல்.ஏ முகம் துடைக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சை வீடியோ
இந்திய மாநிலமான ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ பால்முகுந்த் ஆச்சார்யா. இவர் பேரணியில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது மூவர்ண கொடியை வைத்து முகம் துடைக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை காங்கிரஸ் எம்பி இம்ரான் பிரதாப்கர்ஹி ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "ஜெய்ப்பூர் மக்களுக்கு தினமும் தேசபக்தி சான்றிதழ்களை விநியோகிக்கும் இந்த எம்எல்ஏ, மூவர்ணக் கொடியால் மூக்கைத் துடைக்கிறார்.
இப்படித்தான் மதிக்கிறார்களா? தேசியக் கொடியை அவமதிப்பது கடுமையான குற்றம்" என்று கூறியுள்ளார். மேலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ராஜஸ்தான் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.
இதற்கு விளக்கம் அளித்த பால்முகுந்த் ஆச்சார்யா, "வழியில் வரும்போது வெள்ளை மற்றும் பச்சை நிறத் துணியை எனக்கு கொடுத்தார்கள், அது மூவர்ண கொடி அல்ல.
நான் துணியை முத்தமிட்டு, மற்றொரு துணியால் வியர்வையைத் துடைத்தேன். மூவர்ண கொடியை மதிக்க எனக்கு தெரியும்" என்றார்.
भाजपा विधायक बालमुकुंद आचार्य तिरंगे का अपमान कर रहे हैं
— Manish Yadav लालू (Journalist) (@ManishMedia9) May 15, 2025
यात्रा के दौरान उन्होंने तिरंगे से नाक साफ की
भाजपा विधायक जिस तिरंगे से नाक साफ कर रहे हैं इसी तिरंगे के सम्मान को बचाने के लिए न जाने कितनों ने मौत को गले लगा लिया pic.twitter.com/s3RHiG0oz2
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |