கரூர் சம்பவம்: ஹேம மாலினி தலைமையில் ப.ஜ.க விசாரணைக்குழு அமைப்பு
கரூர் சம்பவம் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ள பாரதிய ஜனதா கட்சி, ஹேம மாலினி தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27) கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர், நடிகர் விஜய் தலைமையிலான பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்துள்ளனர், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் நாடு முழுவதும் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைவர் ஜே.பி. நட்டா, சம்பவத்தை ஆய்வு செய்ய 8 உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக்குழுவை அமைத்துள்ளார்.
இந்த குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நடிகையுமான ஹேமா மாலினி நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை எம்.பி.யுமான அனுராக் தாக்கூர், பாஜக எம்.பி.க்கள் தேஜஸ்வி சூர்யா, பிரிஜ் லால், சிவசேனா தலைவர் ஸ்ரீகாந்த் ஷிண்டே, பாஜக எம்.பி.க்கள் அபராஜிதா சாரங்கி, ரேகா சர்மா, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் புட்டா மகேஷ்குமார் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |